04

E   |   සි   |  

 திகதி: 2018-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0527/2018: Not paying due Interest on the deposit made by Mr. R. Jayabal in the Ceylinco Realty and Consolidated Limited

527/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இல. 25/14, மரதான வத்த, ஹெந்தல, வத்தளை எனும் முகவரியில் வதியும் திரு. ஆர். ஜயபால், இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட செலிங்கோ றியல்ரி அன்ட் கொன்சொலிடேடட் கம்பனியில் ஒரு மில்லியன் ரூபாவை, மூன்று ஆண்டு காலத்திற்கு வைப்பிலிட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார் என்பதையும்;

(ii) இப்பணத்திற்காக செலுத்த வேண்டிய வட்டி ஒழுங்குமுறையற்ற விதத்தில் செலுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) ஆரம்ப வைப்புத் தொகையில் எஞ்சியுள்ள ரூபா 525,000 /= பணத்தொகை முதிர்ச்சியடைந்ததன் அடிப்படையில் திருப்பிச் செலுத்த உத்தேசமாயிருந்த போதிலும், எவ்வளவுதான் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அத்தொகை திருப்பி வழங்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி கம்பனி உட்பட இத்தகைய பல கம்பனிகள் இவ்வாறு பண வைப்பாளர்களுக்கு மோசடி செய்தல் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-22

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks