04

E   |   සි   |  

 திகதி: 2018-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0526/2018: Insurance for families affected by the floods

526/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட காப்புறுதி இழப்பீ்ட்டுத் தொகை அக்குடும்பங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதையும்;

(ii) 2016ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சேதமடைந்த வீடு ஒன்றுக்கு அதிகபட்சம் ரூபா 25 இலட்சம் வரை காப்புறுதி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதம அமைச்சரினால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கொலொன்னாவ, அங்கொட, வெல்லம்பிட்டிய, சேதவத்த, களனிமுல்ல, பேலியகொட, கடுவலை மற்றும் பஹல போமிரிய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள எந்தவொரு வீட்டுக்கும் இதுவரை அவ்வாறான காப்புறுதி இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்டவர்களின் சேதமடைந்த வீடுகளை விலை மதிப்புச் செய்து காப்புறுதி இழப்பீட்டுத் தொகையொன்றை அல்லது வேறு ஏதேனும் இழப்பீட்டுத் தெகையொன்றை செலுத்த நடவடிக்கை எடுக்கும் திகதி யாது என்பதையும்;

(iv) சேதமடைந்த வீடுகளுக்கு இன்றளவில் ஏதேனும் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டிருப்பின், அவ்வாறு இழப்பீடு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(v) அத்தகைய காப்புறுதி இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவு யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-21

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks