சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1900-01-30
2025-02-27
2015-05-19
காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்புருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(974 ஆம் இலக்க மது அறிவித்தல்)
2014-11-19
காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 1885/44 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கங்கள் 968, 969, 970, 971 மற்றும் 972 )
2014-03-18
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் (1) ஆம் பிரிவின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி, திட்டமிடல் உப அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 சனவரி 20ஆம் திகதிய 1846/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்.
(962 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)
2014-03-18
காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில், நிதி திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2014 சனவரி 20 ஆம் திகதிய 1846/9 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
963 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)
2013-10-08
காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 22(1) ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2013 யூலை 29 ஆம் திகதிய 1821/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 958)
2013-10-08
காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 22(1) ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2013 யூலை 29 ஆம் திகதிய 1821/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல்கள் 959, 960, 961)
2013-07-11
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2013 ஏப்பிறல் மாதம் 03 ஆம் திகதிய 1804/16 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை. (மதுவரி அறிவித்தல் இல. 957)
2012-05-24
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் அமைச்சரினால் மது தொடர்பில் விதிக்கப்பட்டு 2012 மார்ச்சு மாதம் 30 ஆம் திகதிய 1751/29 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல்கள் இலக்கம் 947, 948, 949 மற்றும் 950)
2012-05-24
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதியினால் மதுசாரம் தொடர்பில் விதிக்கப்பட்டு 2012 மார்ச்சு மாதம் 30 ஆம் திகதிய 1751/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 951)
2011-12-17
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ், நிதி திட்டமிடல் அமைச்சரினால் மதுவரி தொடர்பில் விதிக்கப்பட்டு, 2011 ஒற்றோபர் மாதம் 19 ஆம் திகதிய 1728/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, கட்டளை.
(மதுவரி அறிவித்தல்கள் இலக்கம் 939, 940, 941 மற்றும் 942)
2011-12-17
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில் நிதி திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2011 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1733/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 946)
2011-12-17
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில் ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டு, 2011 ஒற்றோபர் மாதம் 20 ஆம் திகதிய 1728/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 943)
2011-12-17
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில் ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டு, 2011 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1733/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 945)
2011-12-17
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், 25 ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2011 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1733/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 944)
2011-10-06
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேரத்து வாசிக்கப்படும் (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 (1) (அ) ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதியினால் இயற்கைத் தன்மை கெடாத குடிபான வகையினைச் சாரந்த, விற்பனை நோக்கில் போத்தலில் அடைக்கப்பட்டதுமான மதுபான ஏற்றுமதிக்காக, அனுமதி வழங்கல் தொடர்பில் விதிக்கப்பட்டு 2011 யூன் மாதம் 21 ஆம் திகதிய 1711/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 937)
2011-10-06
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேரத்து வாசிக்கப்படும் (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 (1) ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதியினால் உள்நாட்டு மருந்து உற்பத்தி மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஈதைல் மதுசாரம் தொடர்பில் விதிக்கப்பட்டு 2011யூன் மாதம் 21 ஆம் திகதிய 1711/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 938)
2011-05-03
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் உப பிரிவின் கீழ், நிதி, திட்டமில் அமைச்சரினால் மதுசாரம் மற்றும் மதுவரி தொடர்பில் விதிக்கப்பட்டு, 2011, சனவரி மாதம் 05 ஆந் திகதிய 1687/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 931, 932, 933 மற்றும் 934)
2011-02-10
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 (1) ஆம் பிரிவின் கீழ், நிதி திட்டமிடல் அமைச்சரினால் மதுசாரத்திற்கான மதுவரி தொடர்பில் விதிக்கப்பட்டு 2010 நவெம்பர் மாதம்19 ஆம் திகதிய 1680/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்.
(மதுவரி அறிவித்தல்கள் இலக்கம் 927, 928, 929 மற்றும் 930)
2011-02-10
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ், நிதி திட்டமிடல் அமைச்சரினால் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் அனுமதி பெற்ற ஹோட்டல்களுக்குள் மதுபானம் பரிமாறுவது தொடர்பில் விதிக்கப்பட்டு 2011 சனவரி மாதம் 21 ஆம் திகதிய 1689/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 935)
2011-02-10
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், 25 ஆம் பிரிவின் கீழ், நிதித் திட்டமிடல் அமைச்சரினால் மதுபான உரிமக் கட்டணங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டு, 2010 நவெம்பர் மாதம் 19 ஆம் திகதிய 1680/24 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 926)
2011-02-10
அரசியலமைப்பின் 44 (2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படுவதான, (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 (1) ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதியால் உள்நாட்டு மருந்து உற்பத்தி மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கைத்தொழில் மற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஈதைல் மதுசாரம் மீதான தீர்வை தொடர்பில் விதிக்கப்பட்டு 2010 ஒற்றோபர் மாதம் 28 ஆம் திகதிய 1677/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 925)
2010-07-05
அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்த வாசிக்கப்படும் (அத்தியாயம் 52) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 (1) ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு 2010 மே 31 ஆம் திகதிய 1656/02 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை. (915 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)
2010-07-05
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52ஆம் அத்தியாயமான) 22ஆம் பிரிவின் 1ஆம் உப பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரால், 2009, மார்ச்சு மாதம் 26 ஆம் திகதிய 1594/24 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 907, 908, 909 ஆம் இலக்க மது வரி அறிவித்தல்களில் மற்றும் 2008, ஒற்றோபர் மாதம் 07ஆம் திகதிய 1570/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 906 ஆம் இலக்க மதுவரி அறிவித்தலில் உள்ள கட்டளைகளை நீக்கி 2010, யூன் மாதம் 23 ஆம் திகதிய 1659/18 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை. (916, 917, 918, 919 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்கள்)
2010-05-18
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் (அத்தியாயம் 52) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் (1) ஆம் உட் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் 1985 ஓகத்து 14 ஆம் திகதிய 362/6 ஏ ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 744 ஆம் இலக்க மதுவரி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மாற்றீடு செய்வதன் மூலம் 2010 பெப்ருவரி மாதம் 12 ஆம் திகதிய 1640/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விதிகள்.