பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் அது தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து நவம்பர் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் உள்ள பல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை நிகழ்நிகழ்ச்சிகளில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியயத்தின் தலைவர், கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் நாளொன்றுக்கு 17 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதுடன், ஆண்டுதோறும் சுமார் 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகின்றனர். மேலும், வருடாந்தம் 1,000 இற்கும் அதிகமானோர் இந்நோயினால் உயிரிழப்பதுடன், இது நாளொன்றுக்கு சுமார் மூன்று உயிரிழப்புகளுக்குச் சமமாகும். மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம் இங்கு முக்கிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் தமது மார்பகங்களின் இயல்பான தன்மையைப் பற்றி அறிந்திருப்பதுடன், வழக்கமாக சுய பரிசோதனைகளையும் மேற்கொள்வது அவசியமாகும். ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்தால், தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமாகும். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் வெற்றிகரமான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அரசாங்க சுகாதார நிறுவனங்களின் ஊடாக இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சுகாதார சேவைகளும் வழங்கப்படுகின்றன.
அத்துடன், ஒவ்வொரு பெண்ணும் சுவனாரீ (Well Woman) சிகிச்சை நிலையங்களில் கலந்துகொண்டு, கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் பரிந்துரைக்கப்பட்ட பாப் பரிசோதனையை, தனது 35 மற்றும் 45 வயதுகளில் மேற்கொள்வதும் அவசியமாகும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks