01

E   |   සි   |  

2026-09-22

செய்தி வகைகள் : செய்திகள் 

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.09.22

“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்

“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் கலாநிதி  ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (22) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பின்வருமாறு;

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்”  மற்றும் “நீதித்துறை (திருத்தம்)”எனும் சட்டமூலங்கள் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.
உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்துள்ளது;

•    அரசியலமைப்பின் 83-வது உறுப்புரையின் ஏற்பாடுகளின்படி, "அரசியலமைப்பிற்கான இருபத்திரண்டாவது திருத்தச் சட்டமூலம்" அல்லது அதன் எந்தவொரு பகுதியையும்  மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை.

•    “அரசியலமைப்பிற்கான இருபத்தி இரண்டாவது திருத்தம்” மசோதாவின் வாசகம் 2 இல் உள்ள காப்பு வாசகத்தின் படி, அதில் தோன்றும் “හැට හතට එලඹෙන දිනය” என்ற சொற்றொடர் “හැට හත සම්පූර්ණ කළ දිනය” என்ற சொற்றொடரால் மாற்றப்படும்.

•        "அரசியலமைப்பிற்கான இருபத்திரண்டாவது திருத்தச் சட்டமூலத்தின்" வாசகம் 2க்கு இரண்டாவது காப்பு வாசகமாக பின்வருவன சேர்க்கப்பட வேண்டும்:

"மேலும், முதல் காப்பு வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வருட பதவிக்கால வரம்பு, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் எந்தவொரு நபருக்கும் பொருந்தாது."
மேலும், உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்துள்ளது:

•    "நீதித்துறை (திருத்த)" சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல; எனவே, இதனை பாரளுமன்றத்தின் எளிய பெரும்பான்மை மூலம் நிறைவேற்றலாம்.

உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன்.



தொடர்புடைய செய்திகள்

2026-10-27

நவம்பர் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஒக். 23) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய  பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.நவம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்படவிருக்கும் மீள்திருத்தப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.நவம்பர் 04ஆம் திகதி புதன்கிழமை  மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.நவம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை,  மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.நவம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ சட்டத்தரணிசித்ரால் பெர்னாந்துபுத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்கௌரவ லசித் பாஷண கமகேவீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்கௌரவ சட்டத்தரணிஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிஇலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்கௌரவ ரவீந்திர பண்டாரசூட்டிகை வலுசக்திக் கட்டமைப்பையும் சூட்டிகை மின் மானிகளையும் அறிமுகம் செய்தல்கௌரவ ரோஹண  பண்டாரநீச்சல் திறமைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயார் செய்தல்கௌரவ உபுல் கித்சிறிஉடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல்கௌரவ  சட்டத்தரணிஹிருணி விஜேசிங்கநீர்த்தாமரை செடியின் பரவலை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


2026-10-27

கட்டார் தூதுவர் இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்

கட்டார் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மாண்புமிகு ஹமாட் பின் மொஹமட் அல் – டொசாரி அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (23) இலங்கைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது பொதுவான அர்ப்பணிப்பும் வலியுறுத்தப்பட்டது.கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நிலையான பங்காளித்துவம் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வகையில் புதிய தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்குமான தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.தூதுவரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் வலுவான மற்றும் சுமுகமான உறவுகளைச் சுட்டிக்காட்டியதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் உயர்மட்டப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அண்மைக் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களை நினைவுகூர்ந்த அவர், பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.கட்டாரில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் வழங்கும் பெறுமதிமிக்க பங்களிப்பையும் சபாநாயகர் பாராட்டினார். குறிப்பாக, கட்டாரின் அபிவிருத்திக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பு மற்றும் அவர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் ஆதரவு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். இலங்கைக்கு கட்டார் அரசு வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.சர்வதேச பங்காளித்துவத்தை நெருக்கமாக்குவதில் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் பங்கை எடுத்துரைத்த கௌரவ சபாநாயகர், இலங்கை–கட்டார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைப்பதற்கான இலங்கையின் விருப்பத்தையும் தெரிவித்தார். இத்தகைய முயற்சியானது இரு நாடுகளின் பாராளுமன்ற நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், மேலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான பயனுள்ள தளமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இங்கு கருத்துத் தெரிவித்த தூதுவர் அல் – டொசாரி, நம்பகமான நண்பராகவும் பங்காளியாகவும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கான கட்டாரின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். சுற்றுலா, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளிலும், பரஸ்பர அக்கறைக்குரிய ஏனைய துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இரு நாட்டு மக்களுக்கும் நடைமுறை நன்மைகளை வழங்கும் வகையில் மாற்றியமைத்தல் ஆகியவற்றுக்கான தமது பொதுவான அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.இந்த விஜயத்தின்போது, பாராளுமன்றக் கட்டடத்தின் கட்டடக்கலைச் சிறப்பையும் அதனைச் சூழவுள்ள இயற்கை அழகையும் தூதுவர் பாராட்டினார். அத்துடன், பாராளுமன்ற வளாகத்தில் சுற்றுப்பயணத்திலும் அவர் கலந்துகொண்டார்.


2026-10-27

நேர்மையான அரசியல் தலைமைகளை உருவாக்க நேர்மையான சமூகம் அவசியம் – பிரதி சபாநாயகர்

அரசியல் தலைவர்கள் ஊழலற்றவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்குமானால், அவ்வாறான தலைமைத்துவம் உருவாவதற்கு ஒட்டுமொத்த சமூகத்திலும் நேர்மையும் ஒழுக்க விழுமியங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனப் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டின் அரசியல் வாதிகள் சமூகத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய பிரதி சபாநாயகர், எதிர்காலத் தலைவர்களான மாணவ சமூகத்தினர் பாடசாலைப் பருவத்திலிருந்தே நேர்மையானவர்களாக உருவாக வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவியருக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பாடசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (ஜனாதிபதி நிதியம்) சுபாஷ் ரோஷன் அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகளை விளக்கினார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஆ.சர்வேஸ்வரன் அவர்கள் இலங்கையின் அரசியலமைப்புத் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதான உத்தியோகத்தர் ரீ.என்.எம்.பி.ஷஹீட்  பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கவுரையொன்றை நிகழ்த்தினார்.மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சபாநாயகர் தேர்தல் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்புடன் தொடங்கியது. இதன் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுக்களின் சார்பில் பாடசாலையில் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவ பிரதிசபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான ஆசிரியை சிந்தூரி பத்மராஜ் நன்றியுரையாற்றினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்  ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி ராஜவிஜயன் சார்பில் பிரதியதிபர் மலர்விழி ஸ்ரீகுமார், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-10-23

‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 25 பில்லியன் ரூபா

‘பிரஜா சக்தி’ வறுமையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 25,000 மில்லியன் ரூபா நிதியில், 23,000 மில்லியன் ரூபா மாவட்ட மட்டத்தில் சமூக அபிவிருத்திச் சபைகளால் அடையாளம் காணப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2,000 மில்லியன் ரூபாவிலிருந்து தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படும் நடுத்தர அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்  அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பதிலிலேயே அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் 24,221.38 மில்லியன் ரூபா செலவில் 15,725 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15,316 திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தியின் கீழும், 273 திட்டங்கள் கல்வியின் கீழும், 136 திட்டங்கள் சுகாதாரத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துத் திட்டங்களையும் 2026.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகள் ஊடாக, அந்தந்த மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதற்கு நேரடியாகப் பங்களிக்கும் திட்டங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சமூகச் சூழல், மனித வள அபிவிருத்தி, பராமரிப்பு, விநியோக வலையமைப்புகள் மற்றும் அணுகல் வசதிகள் ஆகிய துறைகளின் கீழ் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் ஊடாக மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கல்வி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அமைச்சுகள் ஊடாகவும் மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி அல்லது ஏனைய நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.அத்துடன், மாற்றுத்திறனாளிகளையும் அவர்களது குடும்ப அலகுகளையும் வலுவூட்டும் நோக்கில், அவர்களுக்கென விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், நிதியுதவி வழங்குதல், நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks