பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-05-08
வியட்னாம் சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் இலங்கை பாராளுமன்றத்திற்கு இன்று (08) விஜயம் மேற்கொண்டதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்ட கால உறவுகள் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன் போது வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி டோ லாம் அவர்கள், வியட்னாமின் அபிவிருத்திப் பயணம், பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம், சமாதானம், நிலைபேறான அபிவிருத்தி, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட முன்னேற்றம் ஆகிய விடயங்களில் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
வியட்னாம் ஜனாதிபதி டே லாம் அவர்கள் மு.ப 11.05 மணியளில் பாராளுமன்றத்தை வந்தடைந்ததுடன், அவரை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன, பிரதி படைக்கல சேவிதர் அசிந்த குரே, உதவி படைக்கல சேவிதர் சசிந்த லக்மால் கடிகமுவ ஆகியோர் பேரணியாக வியட்னாம் ஜனாதிபதியை பாராளுமன்ற கட்டடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து வியட்னாம் ஜனாதிபதிக்கும், கௌரவ சபாநாயகருக்கும் இடையில் உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையில் காணப்படும் ஆளமான நட்புறவு மற்றும் நீண்டகால இராஜதந்திர உறவுகளை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். வியட்னாமின் முன்னாள் தலைவர் ஹோ சி மின் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை நினைவுகூர்ந்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பாராளுமன்ற பரிமாற்றங்களை மேம்படுத்தி, இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த வியட்னாம் ஜனாதிபதி டே லாம் அவர்கள், கௌரவ சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற தூதுக் குழுவை வியட்னாமுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், இலங்கையின் அரசியல் நிலைத்தன்மையையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி முயற்சிகளையும் பாராட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தைப் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தி அதற்கான வியட்னாமின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த விஜயத்தின் போது வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இட்டார்.
இதனைத் தொடர்ந்து கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, வியட்னாம் ஜனாதிபதி டோ லாம், பாராளுமன்ற செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோர் படைக்கல சேவிதர் மற்றும் பிரதி படைக்கல சேவிதர்களால் பேரணியாக சபா மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.35 மணிக்கு சபா மண்டபத்திற்கு வருகைதந்த வியட்னாம் கௌரவ ஜனாதிபதி, கௌரவ சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்ததுடன், மு.ப 11.40 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். வியட்னாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் உரைநிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்னாம் ஜனாதிபதி பி.ப 12.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டார்.
2026-11-12
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 12) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 6.30 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) நவம்பர் 13 ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் இடம்பெறும்.2026 ஒக்டோபர் 7ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 04 சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2026-11-12
இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (நவ. 12) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.சபாநாயகரின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டமூலத்தின் 29 ஆம் வாசகம் அரசியலமைப்பின் 14(1)(இ) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின் போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம், மேற்படி முரண்பாடு நீங்குவதுடன், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.மேலும், சட்டமூலத்தின் 7(1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின்போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மேற்படி முரண்பாடு நீங்குவதுடன், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு உட்பட்டு, சட்டமூலத்தின் ஏனைய ஏற்பாடுகள் எவையும் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் மேலும் தீர்மானித்திருப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும் சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.பின்வரும் திருத்தங்களை (அவற்றில் மூன்று மேலதிக மன்றாடியார் அதிபதி அவர்களினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன) குழுநிலையில் மேற்கொண்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது:-குழுநிலைப் பரிசீலனையின் போது, 26(2) ஆம் உட்பிரிவில் “அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில்” என்னும் சொற்றொடரை உட்புகுத்துவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மேற்படி உட்புகுத்தலுடன், 26(2) ஆம் உட்பிரிவு பின்வருமாறு அமைய வேண்டும்:-“(1) ஆம் உட்பிரிவின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நீதவான் முன்னிலைக்கு கொண்டு வரப்படுவதன் போது, புலனாய்வை மேற்கொள்கின்ற பொலிசு அலுவலர், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக சந்தேகநபரை மேலும் நீடிக்கப்பட்ட காலத்திற்கு தடுத்து வைத்திருப்பது அவசியமானது என நியாயமான ஏதுக்களைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நீதவான், எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களின் அடிப்படையில், அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில், அத்தகைய சந்தேகநபரை மேலும் இருபத்துநான்கு மணித்தியாலங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு பொலிஸ் காவலில் வைத்திருக்கப்படுவதற்கு அதிகாரமளிக்கப்படலாம்;நீதித்துறை மேற்பார்வையை வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு, 59(5)(ஆ) ஆம் பந்தியில் “மேன்முறையீட்டு நீதிமன்றம்” என்னும் சொற்றொடருக்குப் பதிலாக “உயர் நீதிமன்றம்” என்னும் சொற்றொடரை இடுவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.தேவையற்றதாகக் கருதப்படுவதன் அடிப்படையில், சட்டமூலத்திலிருந்து 60(7) ஆம் உட்பிரிவை நீக்குதல்; மற்றும்66(1) ஆம் உட்பிரிவை பின்வருமாறு மீளமைத்தல் வேண்டும்”:-“இச்சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட அல்லது ஆக்கப்பட்ட ஒரு பணிப்புரை, பணிப்பு அல்லது கட்டளை அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு பணிப்பு, அரசியலமைப்பின் 126 ஆம், 140 ஆம் அல்லது 141 ஆம் உறுப்புரைகளின் கீழான நடவடிக்கைளில் கேள்விக்குட்படுத்தலாம்.”“குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருமாறு, தற்போதைய வடிவிலுள்ள சட்டமூலத்தின் வாசகம் 43(3) அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(ஐ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுகிறது. எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான நிபந்தனைகளின் அடிப்படையில், 43(3) ஆம் வாசகத்திற்குப் பதிலாகப் புதிய வாசகமொன்றை இடுவதன் மூலமும், புதிய 43(4) ஆம் வாசகமொன்றை உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடு நீங்கும்.தற்போதைய வடிவிலுள்ள 169 ஆம் வாசகம், அரசியலமைப்பின் 76 ஆம் உறுப்புரையையும் கருத்திற்கொண்டு நோக்கும்போது, அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் 169(1) மற்றும் 169(3) ஆம் வாசகங்களில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மேற்படி முரண்பாடு நீங்கும்.தற்போதைய வடிவிலுள்ள 45 மற்றும் 65 ஆம் வாசகங்கள், அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றன. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 45(1) ஆம் வாசகத்தைத் திருத்துவதன் மூலமும், குடிவரவு வசதிகளுக்கான செலவுகள் தொடர்பான முன்மொழியப்பட்ட ஏற்பாட்டை உரிய இலக்கமிடலுடன் உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடுகள் நீங்கும்.பரிசீலிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அரசியலமைப்புடன் வேறு எத்தகைய முரண்பாடும் இல்லை. எனினும், 174 ஆம் வாசகத்திலிருந்து “எழுத்திலான” என்னும் சொல்லை நீக்குவதன் மூலம் அதனைத் திருத்துவதற்கான உறுதிமொழியையும் உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.அடையாளங்காணப்பட்ட முரண்பாடுகளை நீக்குவதற்குத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், தொடர்புடைய ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட பெரும்பான்மை தேவைப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்தார்.
2026-11-11
இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் டேவிஸ் மயர்ஸ் அண்மையில் கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கௌரவ பிரதிச் சபாநாயகர் டேவிஸ் மயர்ஸை அன்புடன் வரவேற்றதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, சவால்மிக்க காலப்பகுதிகளில் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர், பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றல்களை வலுப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) ஊடாக வழங்கப்பட்ட ஆதரவையும் பாராட்டினார்.இந்தச் சந்திப்பின்போது, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் அண்மைய அமெரிக்க காங்கிரஸ் விஜயம் தொடர்பில் குறிப்பிட்டார். அத்துடன், USAID ஊடாக பாராளுமன்றத்தின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான ஆதரவுகள் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.இலங்கைக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பை டேவிஸ் மயர்ஸ் இதன்போது உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்றக் கட்டடத்தின் அழகியல் மற்றும் அதன் கட்டடக்கலை முக்கியத்துவம் குறித்தும், இலங்கையின் இயற்கை அழகு குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டேவிஸ் மயர்ஸ் பாராளுமன்றக் கட்டடத்தையும் பார்வையிட்டார்.இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் மற்றும் அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-11
அநுராதபுரம் மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொல்பொருள் பெறுமதி மிக்க 846 இடங்களைப் பாதுகாப்பதற்காக இவ்வருடம் 18,058,884 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.இதற்கமைய, திணைக்களத்தின் ஒதுக்கீடுகளின் கீழ் 12,609,034 ரூபாவும், வெளி நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 5,449,850 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இந்தத் தொல்பொருள் தளங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக, ஒவ்வொரு தொல்பொருள் தளத்தின் முக்கியத்துவம், அவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தன்மை, அமைவிடம் மற்றும் சட்டப் பின்னணி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதற்கமைய, குறித்த இடங்களைக் கண்காணித்தல், பாதுகாப்புப் பணிகளை முன்னெடுத்தல், பாதுகாப்பு வேலிகளை அமைத்தல், எல்லைக் கற்களை நாட்டுதல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆய்வுகளை முன்னெடுத்தல், பராமரித்தல், உறுதிப்படுத்துதல், அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks