04

E   |   සි   |  

2026-02-05

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2026 பெப்ரவரி 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : “வாடகை (நீக்கல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
3 : பாராளுமன்ற பணியாளர்களினால் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படும் ஐஸ் போதைப்பொருட்கள் குறித்த லங்காதீப செய்திக் கட்டுரை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் வருடாந்த அறிக்கை
(iii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2(3) ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2025 நவம்பர் 25 ஆம் திகதிய 2464/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2025 திசெம்பர் 04 ஆம் திகதிய 2465/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2025 திசெம்பர் 31 ஆம் திகதிய 2469/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi)    (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான தீர்மானம்
(vii)    (2025 நவம்பர் 25 ஆம் திகதிய 2464/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(viii)    2024 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(ix)    2016 ஆம் ஆண்டுக்கான தேயிலை சக்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(x)    2019 ஆம் ஆண்டுக்கான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(xi)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xiii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xiv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வலுசக்தி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv)    2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆண்டறிக்கைகள்
(xvi)    2024 ஆம் ஆண்டுக்கான “இழப்பீடுகளுக்கான அலுவலகம் - இலங்கை” இன் வருடாந்த அறிக்கை.
(xvii)    2024 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆண்டறிக்கை
(xviii)    2023 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஆண்டறிக்கை
(xix)    2024 ஆம் ஆண்டுக்கான இந்துப் பண்பாட்டு நிதியத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்ஜுள சுரவீர ஆரச்சி                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ -  இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டணம், மறுசீரமைப்பு போன்றவை

(ii)    கௌரவ கே. காதர் மஸ்தான்
புத்தளம் – மன்னார் வீதி அபிவிருத்தி

கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச பாடசாலைகளின் கல்வியியல் ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கல்வி வழங்குவதில் சமத்துவம் மற்றும் நியாயம் மற்றும் பரீட்சைகளை நிரலிடுவது தொடர்பாக முறையே 2025.10.10 மற்றும் 2025.11.24 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச மற்றும் கௌரவ கே. காதர் மஸ்தான் ஆகியோரினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii)    இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2025.11.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாருக்  
பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கூற்று தொடர்பாக அக்குரணை பிரதேச சபையின் பிரதித் தலைவர் தன்னை உடல் ரீதியாகத் தாக்குவதாக மிரட்டல் விடுத்தமை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i)    இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகம் – திருத்தங்களுடன்
(ii)    கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல்
– திருத்தங்களுடன்
(iii)    கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) 



ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி  


அதனையடுத்து, 1801 மணியளவில் பாராளுமன்றமானது 2026 பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 



தொடர்புடைய செய்திகள்

2026-03-20

2026 மார்ச் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர் பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2022/2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நனோ தொழில்நுட்ப (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(ii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக் கூற்றுமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார                   (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ கே.காதர் மஸ்தான்அரசாங்கத்தால் பிரதம மதத் தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளின் விபரங்கள்(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட கூட்டுப் புதைகுழிகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகளின் விபரங்கள்கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.ஒத்திவைப்புப் பிரேரணை “உலகின் தற்போது நிலவும் நிலைமை” பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-03-19

2026 மார்ச் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : இணைந்த  விசேட பொதுக் கூட்டம்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் 3 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLV (45) மற்றும் XLVI (46) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXX (30) ஆம் பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் பிரிவு 3 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 4ஊ இன் கீழ் தகுதிபெறுவதற்கான அளவுகோல்களையும், வரி விலக்களிப்புகள் அல்லது வரிச் சலுகைகள் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2026 பெப்புருவரி 08 ஆம் திகதிய 2474/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(ii)    2022 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கை(iii)    2023 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகார சபையின் வருடாந்த அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன  - இரண்டு மனுக்கள்(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ  - இரண்டு மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசநாட்டில் வறுமைக்கான வரையறை, புள்ளிவிபரங்கள், கொள்கை போன்றவை.(ii)    கௌரவ ரவி கருணாநாயக்கவிமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் போன்றவற்றின் விபரங்கள்கௌரவ துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்புப் பிரேரணை“உலகின் தற்போது நிலவும் நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1756 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-03-17

2026 மார்ச் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்2 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப்  பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்(ii)    2024 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்(iii)    2024 ஆம் ஆண்டுக்கான ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை(iv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை(v)    (357 ஆம் அத்தியாயமான) தரைப்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(vi)    (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(vii)    (359 ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(viii)    2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 7(1)இ மற்றும் பகுதி VI என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் விதிகள்  தொடர்பாக ஆளும் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 30 ஆம் திகதிய 2473/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்(ix)    2023 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை(x)    2021 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனி) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(xi)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வருடாந்த அறிக்கை(xii)    2024 ஆம் ஆண்டுக்கான நில அளவைச் சபையின் வருடாந்த அறிக்கை(xiii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xiv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சபரகமுவ மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை.(xvi)    2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படுவதாகிய 34 ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்-2026 தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(xvii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ                   (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன          (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி - நான்கு மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசஉலகில் போர்ச் சூழல் நிலவும் வேளையில், எரிபொருள் விநியோகம் தொடர்வதை உறுதி செய்வதற்கான அரசாங்க நடவடிக்கைகள்கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ ரவி கருணாநாயக்ககிரிப்டோ நாணயங்களின் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்களின் ஒழுங்குபடுத்தல்சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i)    உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது(ii)    சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) - 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது(iii)    தனியாட்கள் மற்றும் கம்பெனிகளின் மீட்பு, புனர்வாழ்வு, மற்றும் கடனிறுக்கவகையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதற்கும், தொகுப்பதற்கும்; (97 ஆம் அத்தியாயமான) கடனிறுக்கவகையின்மை கட்டளைச் சட்டத்தினை நீக்குவதற்கும்; 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தினைத் திருத்துவதற்கும்; 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கும்; 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க, மத்தியஸ்த சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்காக“மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட)”எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வேதனம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-03-06

2026 மார்ச் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டுக்கான லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கை(ii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iv)    2024 ஆம் ஆண்டுக்கான தொல்பொருளியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் ஆறு அறிக்கைகள் அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) மதுர செனெவிரத்ன (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி - மூன்று மனுக்கள்(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஆரியவங்ஷ                   (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சஜித் பிரேமதாசஅரசு நெல் கொள்வனவு செயன்முறையிலுள்ள சிக்கல்கள்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    நகர அபிவிருத்திப் பகுதிகளாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக 2025.08.06 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.(ii)    2009 ஆம் ஆண்டு முதல் தனிநபர் கொலைகள் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2026.03.05 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 81 மற்றும் 82 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 108; எதிராக 08)(ii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks