கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
2 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(v) (357 ஆம் அத்தியாயமான) தரைப்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi) (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii) (359 ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 7(1)இ மற்றும் பகுதி VI என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் விதிகள் தொடர்பாக ஆளும் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 30 ஆம் திகதிய 2473/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2021 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனி) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xi) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வருடாந்த அறிக்கை
(xii) 2024 ஆம் ஆண்டுக்கான நில அளவைச் சபையின் வருடாந்த அறிக்கை
(xiii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சபரகமுவ மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(xvi) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படுவதாகிய 34 ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்-2026 தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
உலகில் போர்ச் சூழல் நிலவும் வேளையில், எரிபொருள் விநியோகம் தொடர்வதை உறுதி செய்வதற்கான அரசாங்க நடவடிக்கைகள்
கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
கிரிப்டோ நாணயங்களின் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்களின் ஒழுங்குபடுத்தல்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) - 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) தனியாட்கள் மற்றும் கம்பெனிகளின் மீட்பு, புனர்வாழ்வு, மற்றும் கடனிறுக்கவகையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதற்கும், தொகுப்பதற்கும்; (97 ஆம் அத்தியாயமான) கடனிறுக்கவகையின்மை கட்டளைச் சட்டத்தினை நீக்குவதற்கும்; 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தினைத் திருத்துவதற்கும்; 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கும்; 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க, மத்தியஸ்த சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்காக
“மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வேதனம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-05-08
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.கௌரவ சபாநாயகரின் வரவேற்புரைகௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் வியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதியும் கொமியூனிஸ்ட் கட்சித் தலைவரருமான அதிமேதகு டோ லாம் அவர்களை வரவேற்று உரையாற்றினார். வியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதியும் கொமியூனிஸ்ட் கட்சித் தலைவரருமான அதிமேதகு டோ லாம் அவர்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுப் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைவியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு டோ லாம் அவர்கள் சபையில் இன்று மு.ப. 11.40 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றினார்.நன்றி உரைகள்கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நன்றியுரைகளை நிகழ்த்தினர்.கௌரவ சபாநாயகர் அமர்வை பி.ப. 1.30 மணி வரை இடைநிறுத்தினார்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─• 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) ஆம் பகுதியையும்; • 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVI (56) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXI (31) ஆம் பகுதியையும்; மற்றும்• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX (49), L (50) மற்றும் LI (51) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVI (36) ஆம் பகுதி(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ (1) உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் ஆறாவது அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-• தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்இலங்கையில் ஏதேனுமொரு தேசிய விளையாட்டு அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு அவர்களின் அடிப்படை கல்வித் தகைமைகள் அல்லது Z-புள்ளிகளின் மீது அடிப்படையாக அமையாமல் விளையாட்டுத்துறைக்குரிய எந்தவொரு பட்டப் பாடநெறியைப் பயில்வதற்குத் தேவையான சட்ட மற்றும் உயர் கல்விக் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்இலங்கையின் பாரம்பரிய பல்கலைக்கழக கட்டமைப்புக்கு அப்பால், தொழிற்சந்தை மற்றும் வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பத்தை இலக்காகக் கொண்ட வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் பாடநெறிகள் குறித்து பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்தாக்குதல், கடத்தல், கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம், கொலை மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை ஆராய்வதற்கும், ஊழியர்கள் பாதுகாப்பாக இலங்கைக்குத் திருப்புவதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யவும் மற்றும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரோிக்கின்றது.• பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்தற்போது எமது சமூகத்திலுள்ள அநேகமானோர் பேராசிரியர், கலாநிதி போன்ற பதவிகளையும், பெயர்களையும் தவறான முறையில் பயன்படுத்தி வருவதனால், அதனை தடுக்கும் பொருட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்விசேடமாக ஊவா மாகாணம் உட்பட மலையகப் பிதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பைனஸ் செய்கையால் நீர் மூலங்களுக்கும் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, அவற்றை அகற்றி, பயன்தரு உள்நாட்டு பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கான முறையியலொன்று தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• இளம் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுத்தல்கடந்த காலத்தில் பாடசாலை ஒவ்வொன்றிலும் உளவள ஆலோசனைக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உளவள ஆலோசனைக்கான பிரிவொன்றை நிறுவுதல், மாவட்டச் செயலகம் ஒவ்வொன்றிலும் உளவள ஆலோசனைக்கான அலகு ஒன்றை நிறுவுதல், அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உளவள ஆலோசனைக்கான டிப்ளோமா கற்கைநெறிகள், பட்டப் படிப்பு கற்கைநெறிகள் மற்றும் பட்டமேற்படிப்பு கற்கைநெறிகளைப் போதித்தல், மன அழுத்தத்திற்குத் தீர்வுகாண ஒவ்வொரு பிரதான வைத்தியசாலையிலும் உளவியல் மருத்துவப் பிரிவுகளை ஆரம்பித்தல் போன்றவற்றால் இளம் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதால் அரசியல் அதிகாரத்தார், அரசாங்க அலுவலர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அத்தகைய செயற்பாடுகளில் தீவிரமாக இடையீடு செய்ய வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.அதனையடுத்து, 1716 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-05-07
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளமை காரணமாக வெள்ளிக்கிழமை, 8 மே 2026 அன்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஆண்டறிக்கை(ii) 2024 ஆம் ஆண்டுக்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய சபை மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் வருடாந்த அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற அருண் ஹேமச்சந்திரா - இரண்டு மனுக்கள்(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன- இரண்டு மனுக்கள்(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம (v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோக செயல்முறைகௌரவ துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாவடக்கில் விடுவிக்கப்படாத தமிழ் மக்களின் காணிகளை முறைகேடாக பயன்படுத்தல் மற்றும் மீளளிப்பு நடவடிக்கைகள் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i) வட்டகச்சியிலுள்ள கமத்தொழில் பாடசாலை மற்றும் பண்ணை இயங்காமை தொடர்பாக 2026.01.07 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.(ii) நாட்டில் வறுமைக்கான வரையறை, புள்ளிவிபரங்கள், கொள்கை போன்றவை தொடர்பாக 2026.03.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கௌரவ (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள் பதிலளித்தார்.தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்கெளரவ எம். ஏ. எம். தாஹிர் அவர்களுக்கு “மாஸ் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்(iii) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்(iv) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 145; எதிராக 06)(v) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்அதனையடுத்து, 1816 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1135 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-05-06
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் ஆண்டறிக்கை. (ii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2026 ஏப்பிறல் 28 ஆம் திகதிய 2486/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்(iii) 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.03.04 முதல் 2026.03.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு(iv) 2023 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே - இரண்டு மனுக்கள்(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - நான்கு மனுக்கள் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயகபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ கே. காதர் மஸ்தான்தேசிய முன்பள்ளி முறைமையை உருவாக்குவதற்காக முன்பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்துதல்கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்2025/2026 மஹா பருவத்தில் நெல் உற்பத்தியில் ‘தித்வா’ புயலின் தாக்கம்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிதி நிலை, மறுசீரமைப்பு போக்கு மற்றும் நிதி வெளிப்பாடு தொடர்பாக 2026.02.20 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலு சக்தி அமைச்சர், கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i) தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தம்) - 2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது(ii) நிதி (திருத்தம்) - 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது(iii) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தைத் திருத்துவதற்காக“தேசிய சூழல் (திருத்தம்)”எனும் சட்டமூலத்தினை கௌரவ சுற்றாடல் அமைச்சர்அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)சபையினால் நிறைவேற்றப்பட்டது.அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 07ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-05-05
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள்1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 2 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள்3 : "உண்ணாட்டரசிறை (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்4 : “நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்)” மற்றும் “பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்)” எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்5 : தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விஷேட குழுவில்” பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─• 2019 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XXIII (23) ஆம் பகுதியையும்; • 2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XXVII (27) ஆம் பகுதியையும்; • 2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXX (70) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLVII (47) ஆம் பகுதியையும்; • 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LV (55) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXX (30) ஆம் பகுதியையும்; மற்றும்• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVII (47) மற்றும் XLVIII (48) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIII (33), XXXIV (34) மற்றும் XXXV (35) ஆம் பகுதிகளை(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XLII (42) ஆம் பகுதியையும் மற்றும் நான்காவது தொகுதியின் XXV (25) ஆம் பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மார்ச் 23 ஆம் திகதிய 2481/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(ii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மார்ச் 31 ஆம் திகதிய 2482/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(iii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்ரல் 02 ஆம் திகதிய 2482/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(iv) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் எல்லை நிர்ணய ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi) 2022 ஆம் ஆண்டுக்கான கித்துல் அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை(vii) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான அடிப்படைக் கற்கைகளுக்கான தேசிய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கைகள்(viii) 2023 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை(ix) (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் 23 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 52 ஆம் பிரிவின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரினால் 2026 ஏப்ரல் 23 ஆம் திகதி ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(x) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை(xi) அராசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(iii) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ரிஸ்வி சாலி (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசவெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலில் மோசடியான திசைதிருப்பல் தொடர்பான சிக்கல்கள்கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ ரவி கருணாநாயக்கஎன்டிபி வங்கியில் நிதி மோசடி மற்றும் ஒழுங்குமுறைகளில் மத்திய வங்கியின் பொறுப்புக்கூறல் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்அரசு நெல் கொள்வனவு செயன்முறையிலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2026.03.06 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பணம் தூய்தாக்கல் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்காகபணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)”எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர்அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள்(ii) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்ஒத்திவைப்புப் பிரேரணை“திறைசேரியில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1722 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 06ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.