04

E   |   සි   |  

2026-01-07

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2026 ஜனவரி 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்.
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியின் ஆண்டறிக்கை.
(iv)    2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 24(4) ஆம் பிரிவு மற்றும் 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு என்பவற்றின் பிரகாரம் 2025 யூலை 01 ஆந் திகதி முதல் 2025 செப்தெம்பர் 30 ஆந் திகதி வரை செய்யப்பட்ட “வீரமென்ட் நடைமுறை மூலம் ஒதுக்கீடுகளை மாற்றுதல்” தொடர்பான விவரங்கள் குறித்த அறிக்கை.
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(vi)    2023 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(vii)    2023 ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ உபுல் கித்சிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி (செல்வி) லக்மாலி ஹேமசந்திர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ. பீ. சரத்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா          
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன  -  நான்கு மனுக்கள்
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து -  இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ - இரண்டு மனுக்கள்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிண சமரகோன்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ்
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
மட்டக்களப்பிலுள்ள காணிப் பிரச்சினைகள்

கௌரவ காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ சிவஞானம் சிறீதரன்
வட்டகச்சியிலுள்ள கமத்தொழில் பாடசாலை மற்றும் பண்ணை இயங்காமை


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    தென் கொரிய வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான அரசு – அரசிற்கிடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் விபரங்கள் தொடர்பாக 2025.12.19 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.
(ii)    லக்விஜயா மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கல் தொடர்பான கூற்றொன்றினை வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி அவர்கள் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தினை நீக்குவதற்காக
“பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம்
(ii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்



ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி  


அதனையடுத்து, 1739 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 08ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-03-20

2026 மார்ச் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர் பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2022/2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நனோ தொழில்நுட்ப (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(ii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக் கூற்றுமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார                   (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ கே.காதர் மஸ்தான்அரசாங்கத்தால் பிரதம மதத் தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளின் விபரங்கள்(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட கூட்டுப் புதைகுழிகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகளின் விபரங்கள்கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.ஒத்திவைப்புப் பிரேரணை “உலகின் தற்போது நிலவும் நிலைமை” பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-03-19

2026 மார்ச் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : இணைந்த  விசேட பொதுக் கூட்டம்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் 3 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLV (45) மற்றும் XLVI (46) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXX (30) ஆம் பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் பிரிவு 3 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 4ஊ இன் கீழ் தகுதிபெறுவதற்கான அளவுகோல்களையும், வரி விலக்களிப்புகள் அல்லது வரிச் சலுகைகள் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2026 பெப்புருவரி 08 ஆம் திகதிய 2474/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(ii)    2022 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கை(iii)    2023 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகார சபையின் வருடாந்த அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன  - இரண்டு மனுக்கள்(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ  - இரண்டு மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசநாட்டில் வறுமைக்கான வரையறை, புள்ளிவிபரங்கள், கொள்கை போன்றவை.(ii)    கௌரவ ரவி கருணாநாயக்கவிமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் போன்றவற்றின் விபரங்கள்கௌரவ துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்புப் பிரேரணை“உலகின் தற்போது நிலவும் நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1756 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-03-17

2026 மார்ச் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்2 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப்  பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்(ii)    2024 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்(iii)    2024 ஆம் ஆண்டுக்கான ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை(iv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை(v)    (357 ஆம் அத்தியாயமான) தரைப்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(vi)    (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(vii)    (359 ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(viii)    2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 7(1)இ மற்றும் பகுதி VI என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் விதிகள்  தொடர்பாக ஆளும் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 30 ஆம் திகதிய 2473/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்(ix)    2023 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை(x)    2021 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனி) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(xi)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வருடாந்த அறிக்கை(xii)    2024 ஆம் ஆண்டுக்கான நில அளவைச் சபையின் வருடாந்த அறிக்கை(xiii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xiv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சபரகமுவ மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை.(xvi)    2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படுவதாகிய 34 ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்-2026 தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(xvii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ                   (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன          (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி - நான்கு மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசஉலகில் போர்ச் சூழல் நிலவும் வேளையில், எரிபொருள் விநியோகம் தொடர்வதை உறுதி செய்வதற்கான அரசாங்க நடவடிக்கைகள்கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ ரவி கருணாநாயக்ககிரிப்டோ நாணயங்களின் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்களின் ஒழுங்குபடுத்தல்சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i)    உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது(ii)    சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) - 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது(iii)    தனியாட்கள் மற்றும் கம்பெனிகளின் மீட்பு, புனர்வாழ்வு, மற்றும் கடனிறுக்கவகையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதற்கும், தொகுப்பதற்கும்; (97 ஆம் அத்தியாயமான) கடனிறுக்கவகையின்மை கட்டளைச் சட்டத்தினை நீக்குவதற்கும்; 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தினைத் திருத்துவதற்கும்; 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கும்; 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க, மத்தியஸ்த சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்காக“மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட)”எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வேதனம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-03-06

2026 மார்ச் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டுக்கான லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கை(ii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iv)    2024 ஆம் ஆண்டுக்கான தொல்பொருளியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் ஆறு அறிக்கைகள் அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) மதுர செனெவிரத்ன (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி - மூன்று மனுக்கள்(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஆரியவங்ஷ                   (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சஜித் பிரேமதாசஅரசு நெல் கொள்வனவு செயன்முறையிலுள்ள சிக்கல்கள்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    நகர அபிவிருத்திப் பகுதிகளாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக 2025.08.06 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.(ii)    2009 ஆம் ஆண்டு முதல் தனிநபர் கொலைகள் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2026.03.05 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 81 மற்றும் 82 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 108; எதிராக 08)(ii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks