பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-11-26
செய்தி வகைகள் : செய்திகள்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பத்தாவது நாளான இன்று (நவ. 26) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிடல் பொருளாதார அமைச்சு என்பவற்றின் செலவுத்தலைப்புக்கள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
2025-11-26
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தோனேஷியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ தேவி குஸ்டினா டோபிங் (H.E. Dewi Gustina Tobing) அவர்கள் கௌரவ அதிதியாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் அத்தம்பாவா அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.பகிரப்பட்ட சமயரீதியான தொடர்புகள், கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான ஈடுபாடுகளின் அடிப்படையில் இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையேயுள்ள நீண்டகால நட்புறவை இரு தரப்பினரும் இங்கு வலியுறுத்தினர். சுற்றுலா, விவசாயம், எரிசக்தித் துறை மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றம் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை அவர்கள் மேலும் எடுத்துரைத்தனர். அத்துடன், மீளஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பயனுள்ள தளமாகச் செயற்படும் என்று இரு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டனர்.இக்கூட்டத்திற்கு முன்னர், இந்தோனேஷியத் தூதுவர் கௌரவ சபாநாயகரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன.
2025-11-26
இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்புரி மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 1,000,000 யுவான் பெறுமதியான (ஏறத்தாழ ரூ.43 மில்லியன்) ஒருதொகுதி உபகரணங்களை அனைத்து சீன பெண்கள் சம்மேளனம் நன்கொடையாக வழங்கியது. இலங்கை பாராளுமன்ற பணியாளர்களுக்கு தாய் சேய் அறை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான உபகரணங்கள், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ள பெண்களுக்கான சுகாதார உற்பத்திகள் உள்ளிட்டவை இந்த நன்கொடையில் உள்ளடங்கியுள்ளன.இந்த உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (நவ. 25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் அவர்கள் இந்த உபகரணங்களை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரிடம் வழங்கிவைத்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, ஆழமான நட்புறவின் வெளிப்பாடாக இந்த நன்கொடை அமைந்துள்ளது என்றார். பெண்கள் மற்றும் சிறுவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது பகிரப்பட்ட முன்னுரிமையாக உள்ளது எனச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இதற்கு அனைத்து சீன பெண்கள் சம்மேளனம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய கௌரவ அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையிலான இந்த நன்கொடைக்கு நன்றி பாராட்டினார். நன்கொடையாக வழங்கப்படும் பொருட்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய திட்டங்களை நேரடியாக வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சீனாவும் இலங்கையும் நீண்ட நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன. அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் இந்த நன்கொடையானது பெண்கள் மற்றும் சிறுவர்களை வலுவூட்டுதல், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சீனா உறுதியாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது எனத் தெரிவித்தார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கும், அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்திற்கும் இடையில் 2023, 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. பாடசாலை சீருடைகள் வழங்குதல் மற்றும் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது உள்ளிட்ட ஒத்துழைப்புக்கு சீன அரசாங்கம் இந்தச் சந்திப்புக்களின் போது உறுதியளித்திருந்தது. இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற நிதிப் பணிப்பாளர் சரத் குமார, பாராளுமன்றத்தின் இணைப்புப் பொறியியலாளர் லலித் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-25
குறித்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் நேற்று (நவ. 24) கையளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பெண் பணியாளருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக 2025.01.07ஆம் திகதி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களினால் சபா மண்டபத்தில் உரையாற்றும்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதுடன், குறித்த விசாரணை தொடர்பில் முறைப்பாடு செய்த நபர் திருப்தியடையாத காரணத்தினால் இது பற்றி வெளியக விசாரணையை நடத்துவதற்குப் பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவில் 2025.07.25ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் மேற்படி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நேற்றையதினம் கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின்படி, விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளிலிருந்து முறைப்பாடு செய்த பெண் பணியாளர் எவ்வித பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகவில்லை என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அதே பிரிவில் வேறு எந்த பெண் பணியாளருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லையென்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025-11-25
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஒன்பதாவது நாளான இன்று (நவ. 25) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks