பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-11-24
ஒன்றிணையுங்கள்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முனைவு: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) உலகளாவிய செயல்முனைவுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நிற்கின்றனர்
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன், இலங்கை புதிய பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது. நெருக்கடிக்கு முன்னரும் கூட, பாலின அடிப்படையிலான வன்முறையின் பாரதூரமான மனித உரிமை மீறல் காரணமாக, பெண்களும் பெண் குழந்தைகளும் முழுமையான சுதந்திரம், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பை அனுபவிக்கவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் துறையால் நடாத்தப்பட்ட பெண்கள் நல்வாழ்வு ஆய்வு 2019 ஆனது, அவர்களின் வாழ்நாளில், எப்போதும் துணையுடன் இருக்கும் பெண்களில் 20 சதவீதம் பேர் நெருங்கிய துணையால் உடல் ரீதியான மற்றும்/அல்லது பாலியல் ரீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர் என்றும், 25 சதவீதமான பெண்கள் 15 வயதிற்குப் பிறகு ஒரு துணை அல்லது துணை அல்லாதவர் மூலம் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையை அனுபவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கின்றது. 18 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் துணை ஒருவரினால் பொருளாதாரத் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியதாக வெளிப்படுத்தியுள்ளனர். துணை ஒருவரினால் வன்முறையை அனுபவித்தவர்களில் 21 சதவிகிதப் பெண்கள், நேர்காணலுக்கு மத்தியில் அதை யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை.
பொருளாதார நெருக்கடியானது நிச்சயமாக இந்த ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நபர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உயர் பணவீக்க விகிதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பட்டினி, ஊட்டச்சத்து நெருக்கடி, வீடுகளில் ஏற்படும் செலவுப் போராட்டம், அதிகரித்து வரும் வறுமை நிலைகள், சமூக அமைதியின்மை, இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட சுகாதார உதவிகளின் குறைப்பு ஆகியவை பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பாதகமான தாக்கங்களுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவு பாதிப்பிற்குள்ளாக்க நேரிடும்.
2022 பிரச்சாரத்தின் உலகளாவிய தொனிப்பொருள், “ஒன்றிணையுங்கள்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முனைவு” என்பதாகும். ஒற்றுமை இல்லாமல் GBVயை எதிர்த்துப் போராட முடியாது என்பதை வலியுறுத்துகின்றது, இதனால் அரசாங்கங்கள், அபிவிருத்திப் பங்காளர்கள், CSO க்கள், இளைஞர்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் GBVக்கு எதிராகப் போராட ஒன்றுபட வேண்டும். எனவே, GBVக்கு எதிரான 16 நாட்கள் செயல்முனைவானது, இலங்கைப் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்குவதற்கும், அவர்களுக்கு சமமான அடிப்படைகளை வழங்குவதற்குமான எமது இலக்குக்கான ஒரு முக்கியமான பரிந்துரைக் காலமாகும்.” கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் (WPC) தவிசாளர்.
“GBV என்பது இலங்கையில் பெண்களுக்கு ஒன்றும் புதிதல்ல. பெண்களாகிய நாம் அதை எப்போதும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அது சரியானதல்ல. அதை நாம் சாதாரணமாக்க அனுமதிக்க முடியாது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் எப்போதும் பாலின அடிப்படையில் வாய்மொழி ரீதியான வன்முறையை எதிர்கொள்கின்றோம். தேர்தலின் போதும், நம்மை யாரேனும் இழிவுபடுத்த எத்தனிக்கும் போதும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆயுதம், நமது பாலின வகிபங்கினையும், பொதுவெளியில் நமது பாத்திரங்களை களங்கப்படுத்தும் ஒரே மாதிரியான சிந்தனையையும், ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினராக அரசியலில் ஒரு தலைவராக வீட்டை விட்டு வெளியேறுவதனையும் தான். இதனை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். GBV யின் எந்த வடிவத்தினையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.” கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, WPC இன் உப இணைத் தவிசாளர் தலைவர்.
“இன்று இலங்கையின் இந்தப் பாரதூரமான சூழலில், GBVக்கு எதிரான இந்த வருடத்தின் 16 நாட்களுக்கான உலகளாவிய செயல்முனைவிற்குள் நாம் நுழைகின்றோம். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றோம். இலங்கையில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்த அல்லது மேம்படுத்துவதற்கு நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, எப்போதும் முயன்று வருகின்றோம்.” கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்,
“அனைத்து இலங்கையர்களும் எந்தவொரு மனிதனுக்கும் எதிரான வன்முறை அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கும் பூஜ்ய சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் GBV இன் இத்தகைய செயல்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும் போதுமான பதில்களுடன் கூடிய கடுமையான வெறுப்பைக் காட்டுமாறும் நாங்கள் வலியுறுத்துகின்றோம். நமது அலட்சியமே குற்றவாளிகள் தாங்கள் செய்யும் இந்த மனித உரிமை மீறல்களை சாதாரணமாக்குகின்றது. எனவே, அமைதியாகவும் செயல்திறனற்ற பார்வையாளர்களாகவும் இருக்காமல் நாம் செயற்பட வேண்டும்." கௌரவ (திருமதி) டயனா கமகே, சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்.
“பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சமூகம் நம்பிக்கை இழந்துவிட்ட காலகட்டம் இது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எவ்வாறாயினும், எங்களிடையே கட்சி வேறுபாடுகள் இருந்தபோதிலும், பன்னிரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், GBVக்கு எதிராக, குறிப்பாக இலங்கையில் GBVக்கு எதிராகப் பெண்கள் எழுந்து நிற்பதற்கு அவர்களை வலுவூட்டுவதற்கு, உலகளாவிய சமூகத்துடன் ஒன்றிணைந்து நிற்கின்றோம்.” கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக, WPC இன் உறுப்பினர்
“பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் மகளிர் சட்டமூலத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமானது ஈடுபட்டுள்ளது. எவ்வாறாயினும், சட்டங்கள் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதையும், சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது இலங்கையிலுள்ள பெண்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த நிறுவன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்.” கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, WPC இன் உறுப்பினர்
இந்த உலகளாவிய இயக்கத்துடன் ஒன்றிணைந்து நிற்பதற்கு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நவம்பர் 25 ஆம் தேதி முதல் தொடர்ச்சியான பரிந்துரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அவர்கள் GBV யை எதிர்த்துப் போராடுவது தொடர்பில் நவம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் இரண்டு குழுக் கலந்துரையாடல்களை நடாத்துகின்றனர். மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடாத்துகின்றனர். செய்தியாளர் சந்திப்பு நாள் அன்று, “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற செய்தியுடன் கூடிய கைப்பட்டி ஒன்று ஒற்றுமை நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகள் மீது கட்டப்படும். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் செம்மஞ்சள் நிற உடையில் வருமாறு அழைப்பு விடுக்கப்படுவார்கள். இது சமீபத்தில் நிறுவப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சான்றாதாரம் கிடைக்கக் கூடிய பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பான வெளியீடுகளைக் கொண்ட பாராளுமன்ற நூலகத்தின் பாலின மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவில் இடம்பெறும். GBV க்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்பிக்கையில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பாராளுமன்றத் தகவல் முறைமைகள் திணைக்களம் மற்றும் பாராளுமன்ற செயலகத்துடன் கைகோர்த்து மேற்கொள்ளப்படும்.
2026-11-18
கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-17
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-17
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-16
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துதல், காட்டு யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிதல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.யானைகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுதல், பாரம்பரிய யானை வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளில் உணவு தேடிச் செல்லுதல் ஆகியன யானை – மனித மோதல் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக GPS மற்றும் செய்மதிக் கழுத்துப்பட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக பிரதேச மட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுக்களை அமைத்தல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தொடர்பாடல் வலையமைப்புகளைச் செயற்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அத்துடன், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் சேவை, யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்போது காணப்படும் ஆபத்துகள் மற்றும் களத்தில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நடமாடும் மருத்துவ வசதிகள், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், உபுல் கித்சிறி, சட்டத்தரணி எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks