E   |   සි   |  

2022-11-17

செய்தி வகைகள் : செய்திகள் 

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் ஏனைய வசதிகள் காணப்படுகின்றன – சீனாவின் விசேட பிரதிநிதி சபாநாயகரிடம் தெரிவிப்பு

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற வகையில் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் ஏனைய வசதிகள் காணப்படுகின்ற போதும், முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் என வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷன்ஹோங் உடன் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை அண்மையில் (நவ. 15) பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சீன விசேட பிரதிநிதி லிங் கொங்ரியன் இதனைத் தெரிவித்தார்.

தேவையான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, முதலீட்டுக்கு நட்பான சூழல் உருவாக்கப்பட்டால் ஹம்பாந்தோட்டடை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனயை பொருளாதார வலயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு சீனா அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால நட்பு நாடாக சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன், வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் விசேட கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக விளங்குவதற்குத் தேவையான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொழில்துறை மற்றும் விவசாயத்துறையில் மேம்படுத்துவதற்குத் தேவையான திறமைமிக்க இளைஞர் சமுதாயம் போன்ற வளங்களை இலங்கை கொண்டிருப்பதாக பாராளுமன்ற நட்புறவு சங்கத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

லிங் கொங்ரியன் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பின்னர் இக்குழுவினர் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டிருந்ததுடன், சபாநாயகரின் கலரியிலிருந்து சிறிது நேரம் சபை அமர்வுகளையும் பார்வையிட்டனர்.

 

1 2

 

3 4

 

5 6

 

7 8



தொடர்புடைய செய்திகள்

2026-09-25

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (செப். 24) சான்றுரைப்படுத்தினார்.அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்று (24) மற்றும் இன்று (25) ஆகிய இரு தினங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் திருத்தப்படுகிறது.அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையும் திருத்தப்படுகிறது. இதற்கு அமைய,  பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமாக அமுலுக்கு வருகிறது.இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்திலும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் இன்றையதினமும் இடம்பெற்று, மேலதிக வாக்குகளால் இச்சட்டுமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறை திருத்தச் சட்டமூலத்திலும் 4ஆம் பிரிவைத் திருத்துவதன் மூலம், மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்களையும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களையும் நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.


2026-09-25

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 25) மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.13ற்கு ஆரம்பானது. வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து குழுநிலையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரைக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின. இதற்கு அமைய அரசியலமைப்பின் இருபத்திரெண்டாவது திருத்தத்ச் சட்டமூலத்தின் இரண்டாவது உறுப்புரையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.இதன் பின்னர், சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 7.53 மணிக்கு இடம்பெற்றது. குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது மதிப்பீடு 96 மேலதிக வாக்குகளால் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம்  மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முதலாவது மதிப்பீடுக்காக ஓகஸ்ட் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இச்சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் (24) இன்றையதினமும் (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.


2026-09-25

ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினர் செப்டெம்பர் 24ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்து, கௌரவ சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான பேராசிரியர் ஸ்வென் சிமொன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரால்ஃப் சீக்காட்ஸ், ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) குழுவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான ஆலோசகர் பெஞ்சமின் ஒப்பர்மான், KAS சிங்கப்பூரின் ஆசியாவுக்கான பிராந்திய அரசியல் கலந்துரையாடல் திட்டத்தின் கொள்கை ஆலோசகர் ஜோனாஸ் நிட்ஷ்கே, KAS பிரஸ்ஸல்ஸின் சர்வதேச அபிவிருத்திக் கொள்கை கலந்துரையாடல் திட்ட முகாமையாளர் ஸ்வென் நிக்கொலாய், சட்டத்தரணியும் IDAG நிறுவனத்தின் பதிவாளரும் பணிப்பாளருமான சி.ஏ.ஹெட்டியாராச்சி மற்றும் IDAG நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் எஸ்.விமலாகுணரத்ன ஆகியோரும் இத்தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினரை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்றதுடன், இலங்கை பாராளுமன்றத்திற்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் இரு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்டப் பரிமாற்றங்களை சபாநாயகர் நினைவுகூர்ந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈடுபாட்டிற்கு தனது பாராட்டைத் தெரிவித்தார். இது இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கும் சர்வதேச தரநிலைகளைப் பேணுவதற்கான அதன் முயற்சிகளுக்கும் பங்களிப்புச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், ஊழலை எதிர்த்துப் போராடுதல், நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மற்றும் பெண்களின் உரிமைகளை மேலும் மேம்படுத்துவதற்கான பொறிமுறைகளை நிறுவுதல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தார். இயலாமையுடைய நபர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிகளவிலான உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமை, ஜனநாயக ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகியன குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கையின் அரசியல் மற்றும் சமூகச் சூழல், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் சுமுகமான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டனர்.இக்குழுவினர் கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்தனர். அரசியலமைப்புத் திருத்தச் செயற்பாடு, இலங்கையின் அரசியல் முறைமை மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமை தொடர்பில் சுமுகமான கலந்துரையாடலையும் நடத்தியிருந்தனர்.இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றமும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்கு பிரதி சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கை மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் இத்தகைய ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தூதுக்குழுவினர் தனித்தனியான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோரையும், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, சம்பிக்க ஹெட்டிஆராச்சி  ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.இக்கலந்துரையாடல்களில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமை, நாடு எதிர்நோக்கும் சவால்கள், அரசியலமைப்பின் இருபத்திரண்டாவது திருத்தத்தின் பின்னணி மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினர் சபாநாயகர் கலரியிலிருந்து சபை நடவடிக்கைகளையும் பார்வையிட்டதுடன், சபாநாயகர் சபையில் அறிவிப்பை வெளியிட்டு அவர்களை வரவேற்றார்.மேலும், தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர். இதன்மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.


2026-09-24

பாராளுமன்ற உறுப்பினராக ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீபு லெவ்வை முஹம்மது ஹிபான் அவர்கள் இன்றையதினம் (செப். 24) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம். எஸ். அப்துல் வாஸித் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.தொழில்ரீதியாக சட்டத்தரணியான ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான்  அவர்கள் மட்டக்களப்பு, ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ளார். மேலும், அவர் ஸ்ரீலங்கா காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளராகவும் தற்போது செயற்பட்டு வருகின்றார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks