02

E   |   සි   |  

2022-03-19

செய்தி வகைகள் : செய்திகள் 

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் உள்ளிட்ட மூன்று சட்டமூலங்கைளை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டமூலங்களுக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (19) சான்றுரைப்படுத்தினார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு, வேலையாட்கள் நட்டஈடு (திருத்தம்), காணி அபிவிருத்தி (திருத்த) சட்டமூலம் என்பன இவ்வாறு சான்றுரைப்படுத்தப்பட்டு நாட்டின் சட்டக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டன.

இதற்கமைய இந்தச் சட்டங்கள் 2022ஆம் ஆண்டு 09ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2022ஆம் ஆண்டு 10ஆம் இலக்க வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டம், மற்றும் 2022ஆம் ஆண்டு 11ஆம் இலக்க காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டம் என இன்று முதல் (19) நடைமுறைக்கு வருகின்றன.

தனிப்பட்ட தரவைச் செய்முறைப்படுத்துவதனை ஒழுங்குபடுத்துவதற்கும், ஏற்பாடு செய்வதற்கும் தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல் தொடர்பாகத் தரவுடன் தொடர்புபட்டோரின் உரிமைகளை அடையாளங்காண்பதற்கும் பலப்படுத்துவதற்கும்@ தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையைப் பெயர்குறிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்@ அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்கள் இதன் ஊடாக ஏற்பாடு செய்யப்படும்.

2022ஆம் ஆண்டு 10ஆம் இலக்க வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டத்தின் ஊடாக 2005ஆம் ஆண்டு இறுதியாக திருத்தப்பட்ட 1934ஆம் ஆண்டு 19ஆம் இலக்க வேலையாட்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், வேலையிலிருக்கும்போது ஏற்படும் அவசர விபத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்ட பணியாளருக்கு மரணத்தின் போது அல்லது பூரண அங்கவீனமுறும்போது வழங்கப்படும் ஆகக் கூடிய நட்டஈட்டுத் தொகையான 550,000 ரூபாவை 2,000,000 ரூபாவரை (20 இலட்சம்) அதிகரிப்பது இதன் ஊடாக மேற்கொள்ளப்படும்.

மேலும், தற்போது பணியில் ஏற்படும் விபத்துக்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்குவது, பணியிடத்திற்கு வருகை, புறப்பாடு உள்ளிட்ட விளக்கத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல முக்கிய திருத்தங்கள் இதன் மூலம் செய்யப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு 11ஆம் இலக்க காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டத்தின் ஊடாக “காணி ஆணையாளர்" என்னும் சொல்லுக்குப் பதிலாக “காணி ஆணையாளர் தலைமையதிபதி’’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மேலதிக காணி ஆணையாளர்கள், பிரதிக் காணி ஆணையாளர்கள், உதவிக் காணி ஆணையாளர்கள் மற்றும் வேறு அலுவலர்களை நியமிப்பதற்கும், பிரதேச செயலாளரின் அங்கீகாரமின்றி பற்றுநிலத்தை ஈடுவைப்பதற்குப் பற்றுநிலத்தின் சொந்தக்காரரை இயலச்செய்தல் மற்றும் அளவையிடப்படாத காணிக்கான அளிப்பொன்றை வழங்குவது என்பன தடைசெய்தல் உள்ளிட்ட திருத்தங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

 

speaker-endorse-bills-mar-19



தொடர்புடைய செய்திகள்

2026-10-12

தான்சானியா ஐக்கியக் குடியரசில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 153ஆவது மாநாட்டில் இலங்கை சபாநாயகர் பங்கேற்பு

தான்சானியாவின் அருஷா நகரில் 2026 ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 153ஆவது மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த உயர்மட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் மாநாட்டின் முக்கிய அமர்வுகளின் விவாதங்கள், குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் நிலையியற் குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகளில் பங்கேற்றதுடன், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகள் ஆகிய துறைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்தனர்.“உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துதல், நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றின் ஊடாக நல்லாட்சியை மேம்படுத்தி சமூகங்களை வலுவூட்டுதல்” என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், நிலையான ஜனநாயகத்தின் அடித்தளமாகப் பொதுமக்களின் நம்பிக்கையும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையும் விளங்குகின்றன என வலியுறுத்தினார். இலங்கையில் அண்மைக்காலத்தில் எட்டப்பட்ட முக்கிய முன்னேற்றங்களை எடுத்துரைத்த சபாநாயகர், தற்போதைய பத்தாவது பாராளுமன்றத்தில் 22 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன், அவர்கள் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 9.8 சதவீதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்றும், அவர்களில் இருவர் மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.மேலும், முதன்முறையாக மாற்றுத்திறனாளி ஒருவர் பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினராகச் செயற்பட்டு வருவதுடன், அவருக்கு அண்மையில் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தினால் வழங்கப்படும் கௌரவம் மிக்க 2026ஆம் ஆண்டுக்கான புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருதும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியம், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு  போன்ற சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள், சட்டவாக்கத்தில் சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்புகளையும் சபாநாயகர் விரிவாக எடுத்துரைத்தார்.அத்துடன், சைகை மொழி விளக்கத்துடன் பாராளுமன்ற விவாதங்களை ஒளிபரப்புதல், குழுக் கூட்ட நடவடிக்கைகளை ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு அனுமதித்தல் உள்ளிட்ட அண்மைக்கால திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புகள் குறித்தும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய முன்னெடுப்புகள் பொதுமக்களுக்கும் அவர்களது பிரதிநிதிகளான சட்டவாக்கத்துறையினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் வெற்றிகரமாகப் பங்களிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், “உறுதிமொழியிலிருந்து பெறுபேறுகள் வரை: 2030ஆம் ஆண்டை நோக்கி இனப்பெருக்க, தாய்வழி, பிறந்த குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் சுகாதாரத்திற்கான மூன்று பூஜ்ஜிய இலக்குகளை அடைவதற்கான ஆபிரிக்கப் பாராளுமன்ற நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆபிரிக்க புவிசார் அரசியல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்ட இணை நிகழ்வில் இலங்கைத் தூதுக்குழுவினருக்கு விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவின் மருத்துவத் துறைசார் தொழில்முறைப் பின்னணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. தாய்வழி மற்றும் பிறந்த குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துதல், சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவரது மருத்துவ அறிவும் பாராளுமன்றத் தலைமையும் கொண்டுள்ள முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டியது.மாநாட்டின் ஓர் அங்கமாக, இலங்கைத் தூதுக்குழுவினர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றையும் நடத்தினர். இதன்போது, சுகாதாரப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்கான பல்துறைசார் ஈடுபாட்டுப் பிரிவின் தலைவர் லுடி சூரியந்தோரோவைச் சந்தித்தனர்.தேசிய சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய சுகாதார முன்னேற்பாட்டுச் சீராய்வு செயற்பாட்டை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.சுகாதாரப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட அதிகாரத்தை வழங்குதல், வரவுசெலவுத் திட்டச் செயற்பாடுகளின் ஊடாக நிதி ஒதுக்கீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கி அவற்றைப் பாதுகாத்தல், வலுவான மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல், பல்துறைசார் ஆளுகை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய மக்களின் சமத்துவத்தையும் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் பாராளுமன்றம் முக்கிய பங்காற்றுவதாக இலங்கைத் தூதுக்குழுவினர் இதன்போது வலியுறுத்தினர்.உள்ளடக்கிய சமூக அபிவிருத்திக்கான பாராளுமன்ற உத்திகள், இராணுவத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் காலகட்டத்தில் அமைதியை உறுதிப்படுத்துவதில் பாராளுமன்றங்களின் பங்கு, பாராளுமன்ற இராஜதந்திரம் மற்றும் மத்தியஸ்தம் ஊடாக அமைதியான எதிர்காலத்தை உருவாக்குதல், மோதல் காலங்களில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாத்தல், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் மோதல் தடுப்பு பொறிமுறைகளை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைகள் ஆகிய முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து இவ்வமர்வுகளில் கலந்துரையாடப்பட்டது.மேலும், சர்வதேசப் பாராளுமன்ற ஒன்றியத்தின் வழிகாட்டுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், இயற்கை வளங்களை அகழ்ந்தெடுக்கும் கைத்தொழில்களின் மேற்பார்வை, பல்வேறு தலைமுறையினரிடையே டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படும் சுமைகளையும் மனநலப் பிரச்சினைகளையும் கையாளுதல், சிறுவர் உரிமைகளுக்கு ஆதரவான நெறிமுறைசார் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், மாறிவரும் காலநிலைச் சூழலில் ஆரோக்கியமான உணவுகளை வழங்குதல், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளும் நடைபெற்றன.அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 153ஆவது மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் பங்கேற்றமை, ஜனநாயக ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, பொதுமக்களுக்கான பொறுப்புக்கூறல், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பான சர்வதேசப் பாராளுமன்ற உரையாடல் மற்றும் ஒத்துழைப்பில் இலங்கை தொடர்ந்து ஈடுபட்டு வருவதனைப் பிரதிபலிக்கிறது.


2026-10-12

பாராளுமன்றத்தில் புதிய மொழிபெயர்ப்புப் பிரிவு உதயம்

இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பதித்து பாராளுமன்றத்தின் புதிய மொழிபெயர்ப்புப் பிரிவு கடந்த அக்டோபர் 05ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்புப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்கத்துடன் தாபிக்கப்பட்ட இந்தப் பிரிவு, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்கள், ஓர் அலுவலகத்தின் முன்னேற்றத்திற்குச் சரியான தலைமைத்துவமும், கூட்டு ஒற்றுமையும் மிக அத்தியாவசியமானவை எனக் குறிப்பிட்டார். பாராளுமன்றச் செயலகம் எப்போதும் அனைத்துப் பணியாளர்களினதும் வாழ்க்கைத்தரம், தொழில்சார் ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்காக முன்னிற்கும் எனக் கூறிய அவர், பாராளுமன்றம் கொண்டுள்ள மிக மதிப்புமிக்க சொத்து அதன் ஊழியர்களே என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தப் புதிய பிரிவு மொழிபெயர்ப்பாளர்களுக்காகத் திறக்கப்பட்ட போதிலும், அதற்காக தீவிரமாகவும் முன்நின்றும் செயற்படுவது உரைபெயர்ப்பாளர்கள் என்பதைக் கண்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹன்ஸ அபேரத்ன, சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளர் திரு. ஜயலத் பெரேரா, திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.இங்கு வரவேற்புரையாற்றிய சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளர் திரு. ஜயலத் பெரேரா, உரைபெயர்ப்புச் சேவைக்கு மேலதிகமாக உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தினால் பெருமளவிலான மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அவ்வாறிருந்தும், மொழிபெயர்ப்புகள் தாமதமடைவதாகப் பாராளுமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்திலிருந்தும் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.பாராளுமன்ற மொழிபெயர்ப்புப் பணிகளுக்கெனத் தனியான மொழிபெயர்ப்புப் பிரிவொன்றை தாபிக்கும் யோசனை பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் திரு சீ. ஜே. கருணாரத்ன அவர்களால் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களிடம் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் அது நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் கருணாரத்ன, பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தின் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதற்கும், உரைபெயர்ப்பின் தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கும் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் வழங்கி வரும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.இந்தப் பிரிவை தாபிப்பதன் மூலம் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சிறந்ததொரு தொழில்சார் சூழலை உருவாக்குவதும், பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்புப் பணிகளை மேலும் பலப்படுத்துவதும் நோக்கமாகும்.இதன்போது மொழிபெயர்ப்பாளர் கீதம் (Translators’ Anthem) மற்றும் உரைபெயர்ப்பாளர்களுக்கான தொழில்சார் ஒழுக்கநெறிக் கோவை என்பன பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்றச் சேவையில் புதிதாக இணைந்து கொண்ட உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்காக உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட பயிலமர்வை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மொழிபெயர்ப்புப் பிரிவை தாபித்தமைக்காக செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.அதேநேரம், உலகளவில் செப்டம்பர் 30ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினக் கொண்டாட்டமும் இதற்குச் சமாந்தரமாக பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹன்ஸ அபேரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முறை சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் "பல்மொழித் தன்மையும் மொழி உரிமைகளும்" (Linguistic Diversity and Language Rights) எனும் தொனிப்பொருளின் கீழ் "புரிந்துகொள்ளப்படக் கூடிய ஆற்றல்" (The Power of Being Understood) எனும் உப தொனிப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.வெவ்வேறு மொழிகளுக்கும் கலாசாரங்களுக்கும் இடையே தொடர்பாடலையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதில் உரைபெயர்ப்பும் மொழிபெயர்ப்பும் ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பு இங்கு வலியுறுத்தப்பட்டது.முன்னாள் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு.கே.எம். கிறிஸ்தோபர் மற்றும் என். சீர்பாதம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உரைபெயர்ப்புச் சேவைக்காக அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டன.பாராளுமன்றத்தின் முதலாவது மொழிபெயர்ப்புப் பிரிவைத் தாபித்தல் மற்றும் 2026 சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தைக் கொண்டாடுதல் ஆகிய இரு நிகழ்வுகளையும் குறித்து நின்ற இந்நிகழ்வு, பாராளுமன்ற உரைபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புச் சேவைகளை மேலும் தொழில்சார்ந்த மற்றும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கான பயணத்தில் ஒரு முக்கிய தடமாக அமைந்தது.இந்நிகழ்வில் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு.ஏ. சரவணபவானந்தன், சமிலா நிஸ்ஸங்க, ஜீ.எஃப்.பீ. சுரேஷ்வரன் உள்ளிட்ட பெருந்திரளான உரைபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


2026-10-09

ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை பிரதமர் சந்தித்தார்

ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர, இலங்கையுடன் ஆசிய மன்றம் நீண்டகாலமாக பேணிவரும் பங்குடைமைக்கும், நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.அண்மையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு பிரதிநிதிகள் குழுவினர் பாராட்டுத் தெரிவித்ததுடன், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமையையும் பாராட்டினர்.இச்சந்திப்பில், இலங்கையில் ஆசிய மன்றம் முன்னெடுத்து வரும் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த எதிர்பார்க்கும் முக்கிய துறைகள் தொடர்பில் பிரதிநிதிகள் குழுவினர் விளக்கமளித்தனர். அவற்றில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றம், பெண்களின் பொருளாதார வலுவூட்டல், பராமரிப்புப் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவை அடங்குகின்றன.சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் உறுதிப்பாடுகளுடன் இணைந்து, பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதும் சமமானதுமான பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதிநிதிகள் குழுவினருக்கு விளக்கமளித்தார்.அத்துடன், நல்லாட்சியை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக பொது நிறுவனங்களை வலுப்படுத்துதல், நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், ஊழலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அரசாங்க வருவாய் திரட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பணியாளர்களை உருவாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கும் கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன் அடிப்படையிலான கல்வியை விரிவுபடுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் டிஜிட்டல் மாற்றத்தையும் முன்னேற்றுவது தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பொதுச் சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இந்தச் சந்திப்பில் ஆசிய மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தூதுவர் கெத்லீன் ஸ்டீபன்ஸ், சபையின் தலைவர்  தூதுவர் ரொபர்ட் ஓ. பிளேக் ஜூனியர் உள்ளிட்ட ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகளும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-10-09

2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE Tax) மூலம் 569,193 மில்லியன் ரூபா வருமானம்

2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE Tax) மூலம் அரசாங்கம் 569,193 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார். 2022ஆம் ஆண்டில் 25,546 மில்லியன் ரூபாவும், 2023ஆம் ஆண்டில் 144,955 மில்லியன் ரூபாவும், 2024ஆம் ஆண்டில் 197,572 மில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டில் 201,120 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தினால் வரியாக ஈட்டப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களால் வாய்மூல விடைக்கான வினாக்களாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ், மாதாந்தம் 150,000 ரூபாவைத் தாண்டிய வருமானத்தைப் பெறும் அனைத்து ஊழியர்களினதும் வருமான மூலம் தனியாள் முற்பண வருமான வரிக்கு (APIT – Advance Personal Income Tax) உட்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், வேறு எந்தவொரு மூலத்திலிருந்தும் வருமானம் பெறும் நபர்களின் வரி விதிக்கத்தக்க வருமானம் சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டும் பட்சத்தில், அவர்களும் தனிநபர் வருமான வரிக்கு உட்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.அரசாங்கத்தின் நிதித் தேவைகள் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, PAYE வரியின் வருடாந்த வரி விலக்கு வரம்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.இதன்படி, 2019ஆம் ஆண்டு வரை 1,200,000 ரூபாவாக இருந்த வரி விலக்கு வரம்பு, 2020ஆம் ஆண்டில் 3,000,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2022/2023ஆம் ஆண்டில் அந்த வரம்பு மீண்டும் 1,200,000 ரூபா வரை குறைக்கப்பட்டது. அதேவேளை, 2025ஆம் ஆண்டில் வரி விலக்கு வரம்பு 1,800,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.எதிர்காலத்தில் PAYE வரியின் வரி விலக்கு வரம்பு மற்றும் வரி வீதங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின், அரசாங்க வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation) செயற்பாட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு அது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks