2017-08-22
“e-Chamber” எனும் சபாமண்டப முகாமைத்துவ தகவல் முறைமை இன்று நிறுவப்பட்டது. இன்றை சபை அமர்வின் ஆரம்பத்தில் இதனை அமுலுக்கு கொண்டு வரும் வண்ணம் அறிவித்தலொன்றை சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் விடுத்தார்.
இக்கருத்திட்டத்தின் கீழ் அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளுக்கும் மடிக்கணனியொன்று வழங்கப்பட்டுள்ளது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்றத்தில், விசேடமாக சபாமண்டபத்தினுள் அவர்களது செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாகவும் செயற்றிறனாகவும் மேற்கொள்வதற்கு உதவி புரிவதே இதன் நோக்கமாகும். இக்கணினிகள் கியொஸ்க் (KIOSK) முறைமையில் நிறுவப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் கௌரவ உறுப்பினர்களின் செயற்பாடுகளை திறன்பட செய்வதற்கு தேவையான தரவுகள் உட்பட இணையம் மற்றும் மின்னஞ்சல் சேவைகளைப் பெற்றுக்கொள்ள இயலுமாகவுள்ளதுடன் இவ்வளவு காலமும் சபாமண்டபத்தினுள் நிறுவப்பட்டிருந்த வை-பை (Wi-Fi) ஊடாக இது வலையமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டத்திற்கான மடிக்கணினிகள் வெளிநாட்டு உதவியின் கீழ் பெற்றுத் தரப்பட்டுள்ளதுடன், தேவையான மென்பொருள் பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தினால் விருத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைமை ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவாக்க தகவல்கள் (சட்டமூலங்கள், மனுக்கள், வினாக்கள், முதலியன), தனிப்பட்ட தகவல்கள் (சம்பள விபரம், வரவு விபரம், முதலியன), குறித்த தினத்திற்கான அலுவல்கள் தொடர்பான தகவல்கள் (ஒழுங்குப் பத்திரம், தினத்திற்கான நிகழ்ச்சி நிரல், குழு நிகழ்ச்சி நிரல் முதலியன) மற்றும் ஆவணக் காப்பக தகவல்கள் (ஹன்சாட், குழு அறிக்கைகள், முதலிய) போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
நீண்ட காலத்திற்கு இச்சேவைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களது பூரண ஆதரவை நல்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் இதன் மூலம் வழங்கப்படுகின்ற வசதிகள் அவர்களது பாராளுமன்றக் கடமைகளை மேலும் இலகுவாகவும் திறமையாகவும் மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்.
2026-10-02
பாராளுமன்றம் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவுள்ளது.இந்தப் பாராளுமன்ற அமர்வுவாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் கடந்த செப். 25ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய ஒக்டோபர் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் 2493/36 மற்றும் 2493/37 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள், 2493/38 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் பொதுத்தனிசு முகாமைத்துவச் சட்டம் ஆகியவை குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 07ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப. 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் பி.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 08ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ ஹர்ஷ த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்துபுத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்1983 ‘கறுப்பு ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும்,மேலும் இதுபோன்ற இனவன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்கௌரவ லசித் பாஷண கமகேவீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிஇலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்கௌரவ சமிந்த விஜேசிறிஇலங்கை வெளிநாட்டு சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-10-01
பரீட்சைகளில் சித்தியடைவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், பாடசாலையில் பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய திறன், சமூக மற்றும் உணர்வுசார் திறன்களைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு அண்மையில் (செப். 29) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், தற்போதைய கல்வி முறைமையின் மூலம் பரீட்சைகளில் சித்தியடையக்கூடிய பிள்ளைகளை உருவாக்க முடிந்துள்ள போதிலும், அவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான திறன்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் பாடசாலையில் பெற்றுக்கொள்ளும் அறிவை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தும் திறன், சமூக மற்றும் உணர்வுசார் திறன்கள், அத்துடன் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான புரிதல் ஆகியவற்றை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.பாடசாலைகளுக்கு இடையில் காணப்படும் வளங்களின் ஏற்றத்தாழ்வைக் குறைத்து, அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நியாயமான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.அத்துடன், பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, கவர்ச்சிகரமான மற்றும் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கக்கூடிய இடமாக மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பிள்ளைகளின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆளுமை விருத்திக்காக பாடசாலை விளையாட்டு வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், இளைஞர் தலைமுறையினர் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் செயற்பாட்டுமிக்க பிரஜைகளின் பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். அரசியல் என்பது கட்சி அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும், சமூகத்தில் செயற்பாட்டுமிக்க பிரஜைகளாகத் தலையீடு செய்வதும் அதன் முக்கியமானதொரு பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, இலங்கை பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.இங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர், பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் சட்டத்திற்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரசியல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைக்கு இளைஞர் தலைமுறையினர் செயற்பாட்டுடன் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.எந்தவொரு தொழிலையும் கௌரவத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும், ஏனையவர்களின் தொழில்களை மதித்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதன் அவசியத்தையும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தினார். சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மனப்பாங்கில் மாற்றம் அவசியம் எனவும், ஒழுக்கமும் நாகரிகமும் கொண்ட சமூகத்தை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.கொழும்பு வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து வைக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மாணவர்கள் தமது அமைச்சுக்களின் ஊடாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்தனர்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட கௌரவ அதிதிகளின் கரங்களினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஜனாதிபதி செயலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இந்த நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, மேல் மாகாண பிரதம செயலாளர் கே.ஜி. பிரதீப் புஷ்பகுமார, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவஆரச்சி, வலயக் கல்விப் பணிப்பாளர் உதென ஹெட்டிஆராச்சி, பிரதி கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ரஞ்சித் பிரேமதிலக்க, பிரதி கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஹசினி விஜய விக்ரம, பிரதி கல்விப் பணிப்பாளர் (பாடசாலை நிர்வாகம்) சாமலி எதிரிசிங்க, உதவிக் கல்விப் பணிப்பாளர் (சமூக விஞ்ஞானம்) ஏ.கே.எஸ்.கே. ரூபதேவ, கொழும்பு கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான கலாநிதி கே.டபிள்யூ. கிரிஷான் சிந்தக மற்றும் நதீஷா நிர்மலீ உள்ளிட்டோரும் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-30
வரவுசெலவுத் திட்டத்தின் முதலாம் மதிப்பீடு ஒக்டோபர் 07ஆம் திகதிவரவுசெலவுத் திட்ட உரை நவம்பர் 12ஆம் திகதி2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் அண்மையில் (செப். 25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடுக்காக ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2026 நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவுசெலவுத் திட்ட உரை) மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, நவம்பர் 20ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவுள்ளது.அதற்கமைய, அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான 5 கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஒரு கேள்விக்குமாக நேரம் ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்கெடுப்புகள் நடைபெறும் இரண்டு நாட்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் 50:50 என்ற விகிதாசார அடிப்படையில் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.மேலும், இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையிலும், குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையிலும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டது.அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அது குறித்த தினத்தின் இறுதியில் பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2026-09-25
நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (செப். 24) சான்றுரைப்படுத்தினார்.அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்று (24) மற்றும் இன்று (25) ஆகிய இரு தினங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் திருத்தப்படுகிறது.அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையும் திருத்தப்படுகிறது. இதற்கு அமைய, பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமாக அமுலுக்கு வருகிறது.இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்திலும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் இன்றையதினமும் இடம்பெற்று, மேலதிக வாக்குகளால் இச்சட்டுமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறை திருத்தச் சட்டமூலத்திலும் 4ஆம் பிரிவைத் திருத்துவதன் மூலம், மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்களையும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களையும் நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.