பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2016-01-07
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி பயன்பாடு 2016, ஜனவரி 07ஆம் திகதி கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களால் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பாராளுமன்ற குழு அறை இல. 1 இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகங்கள், பாராளுமன்ற உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
கௌரவ சபாநாயகர் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், உலகில் 189 பாராளுமன்றங்கள் இருப்பினும், ஒரு சிலவே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை உருவாக்கியுள்ளதுடன், இது இலங்கைப் பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு தருணமாகும். அவர் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை சுருக்கமாக குறித்துக் காட்டியதுடன் இந்த நிகழ்வானது ஒரு முன்மாதிரியான பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவதற்கான நகர்வொன்றாகுமென மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை பாராளுமன்றம் அதன் பிரதான தொழிற்பாட்டு விடயங்களின் இயலளவை மேம்படுத்துவதற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகளின் உபயோகத்தை ஊக்குவிக்கின்றது. அத்துடன் பிரசைகளின் நாளாந்த வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாட்டின் முக்கியமான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தீர்மானங்கள் பற்றிய அறிவு மற்றும் தகவல் தொடர்பில் சராசரி பிரசையை வலுவூட்டி அதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் அவர்களை துடிப்பான பங்காளிகளாக உருவாக்குவதற்கு உதவுதல்.
தற்போது கையடக்கப் பயன்பாடு பொதுமக்கள் வாழ்க்கையில் பிரபல மற்றும் விளைதிறன் முறையிலான தொடர்பாடலாக மாறிவருகின்றது. இந்தப் பின்னணியில், கையடக்கச் சாதனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பாராளுமன்ற மற்றும் சட்டவாக்க தகவல்கள் சென்றடையக்கூடியவாறு உலகம் பூராகவும் உள்ள பல பாராளுமன்றங்கள் தமது சொந்த கையடக்கப் பயன்பாடுகளை உபயோகித்து வருகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள், சட்டங்களும் சட்டமூலங்களும், பாராளுமன்ற வினாக்களும் பதில்களும், நாட்காட்டி, செய்திகள், புள்ளிவிபரங்கள் போன்றன உள்ளடங்கலாக பாராளுமன்ற தகவல்களை இக்கையடக்க தொலைபேசி பயன்பாடு வழங்குகின்றது. இப்பயன்பாடு ஊடாக ஹன்சாட், ஒழுங்குப் பத்திரங்கள், ஒழுங்குப் புத்தகங்கள், அனுபந்தங்கள் மற்றும் குழு அறிக்கைகள் போன்ற ஆவணங்களை பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம். பாராளுமன்ற சபை நடவடிக்கைமுறையை நேரடியாக பார்வையிடலாம் அல்லது கோரலின் போது காணலாம். மேலும் இப்பயன்பாட்டினை பயன்படுத்துவோர் பாராளுமன்ற உறுப்பினர்களை அல்லது செயலகத்தினை தொடர்பு கொள்ளலாம். அனைத்து உள்ளடக்கங்களும் பயன்படுத்துவோர் விருப்பமான மொழியில் பயன்படுத்துவதற்கு இயலச் செய்கின்றவாறு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் பல அம்சங்களும் மேம்படுத்தல்களும் எதிர்காலத்தில் சேர்க்கப்படவுள்ளன.
பாராளுமன்றத்தின் கையடக்க தொலைபேசி பயன்பாடு கலந்துரையாடும் வழிகளை அறிமுகப்படுத்துவதுடன் தகவல் பெற்றுக் கொள்வதற்கான பெறுவழியினை மேம்படுத்தி வெளிப்படைத் தன்மையினை அதிகரிக்கும் அதேவேளை பாராளுமன்றத்திற்கும் பிரசைகளுக்குமிடையிலான இடைவெளியினை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்றத்திற்கான கையடக்கத் தொலைபேசி பயன்பாடு Bhasha Lanka பிரைவட் லிமிடட் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது என்ரொயிட், ஐஒஎஸ்(iOS) மற்றும் வின்டோஸ் போன் தளங்களில் கிடைக்கப்பெறும்.
கையடக்கத் தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏதும் விசாரணைகள் அல்லது கருத்துரைகள் இருப்பின் mobileapp@parliament.lk இற்கு அனுப்பி வைக்கவும்.
2026-10-15
பேராதனை ரணபிம ரோயல் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.பேராதனை ரணபிம கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன கல்லூரியுடன் இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு உரையாற்றிய பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர அவர்கள், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக அமைகின்றன எனத் தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது ஓர் அலங்காரம் அல்ல என்றும், பிறரின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்காலத்தில் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான முழுமையான பொறுப்பு இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் உரியது எனத் தெரிவித்த அவர், பாரம்பரியமான சிந்தனைச் சட்டகங்களுக்கு அப்பால் சிந்திப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் மனிதவள அபிவிருத்திப் பிரிவின் பிரதானியும் நிர்வாக உதவிப் பணிப்பாளருமான சூலா ஹேரத் அவர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.பேராதனை ரணபிம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையினரும் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தமது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திட்டங்கள் தொடர்பில் சபைக்கு விளக்கமளித்தனர்.இதன்போது, மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவில், பேராதனை ரணபிம கல்லூரியின் அதிபர் எம். எம். பெரேரா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-10-15
இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா எதிர்வரும் ஒக். 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் கொண்டாடப்படவிருக்கும் இந்த நவராத்திரி விழாவில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ சபாநாயகர் வைத்தியர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்து பக்தர்களால் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த நவராத்திரி விழா காணப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுடன், முப்பெரும் சக்திகளை நினைத்து ஒன்பது இரவுகள் வழிபடும் நிகழ்வாகும். இதில் முதல் மூன்று நாட்களும் துர்க்கா தேவியை வேண்டி வழிபாடுகள் நிகழ்த்தப்படும். அடுத்த மூன்று நாட்கள் அழியாத செல்வத்தையும் புகழையும் தரும் லக்ஷமி தேவியை வேண்டியும், இறுதி மூன்று நாட்கள் கல்விச் செல்வத்தை வேண்டி சரஸ்வதி தேவியை நினைத்தும் வழிபாடுகள் நிகழத்தப்படும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் இடம்பெறும்.கௌரவ சபாநாயகரின் வழிகாட்டுதல்களுக்கு அமை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பாராளுமன்ற இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
2026-10-13
சிறுநீரக நோயாளர்கள் 53,604 பேருக்கு மாதாந்தம் தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக, இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் அடையாளம் காணப்பட்டிருந்ததாக கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட வாய்மூல விடைக்கான வினாக்களுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியல் எதுவும் இல்லை எனவும், விண்ணப்பிக்கும் சிறுநீரக நோயாளர்களின் தகைமைகளின் அடிப்படையில் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2026-10-13
நாடு முழுவதும் தற்போது 19,646 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த ஒன்பது வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளினால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.மேலும், பொதுப் பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்துகளிடமிருந்து சட்டவிரோதமாகப் பணம் அறவிடுவதற்கு எவருக்கும் சட்டரீதியான அதிகாரமோ அனுமதியோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான பண அறவீடுகளைத் தடுப்பதற்காகப் பேருந்து பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் இலங்கைப் பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks







