E   |   සි   |  

ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2026, ஆகஸ்ட் 7 மற்றும் 20ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2026 ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன
(2026.08.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.08.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 2 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - பிரேரிக்கப்படவுள்ளது /b>
(2026.08.07 ஆம் திகதிய 172 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 99 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2026 ஆகஸ்ட் 19 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30- பி.ப. 5.00 நிதிச் சட்டத்தின் கீழ் தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது
(2026.08.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.08.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 3ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2026 ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.08.07 ஆம் திகதிய 172 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 87 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2026 ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 2026 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது
(கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு)

(இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2026.08.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2026.08.21 அன்று வெளியிடப்படவுள்ள 176 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 1.00 - பி.ப. 5.30 நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks