பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எம். எஸ். தெளபீக் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டன.

(i) குல்லிய்யத்துல் இமாம் சாபிஈ அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)
(ii) மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன (i) மற்றும் (ii)ஆம் சட்டமூலங்கள் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்

திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நாணயப் புழக்கத்தின் முன்னேற்றம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜானக வக்கும்புர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூலை 25ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks