E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ கயந்த கருணாதிலக அவர்கள் "சம்பிக பிரேமதாச சமுதாய அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2013) இரண்டாம் மதிப்பீடு இன்று சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களை அழைப்பதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 156 பேரும் எதிராக 53 பேரும் வாக்களித்தனர்.


ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2012 நவம்பர் 19ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2013]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks