E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகார சபை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான மீளக்குடியமர்த்துதல் அதிகாரசபை

ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதிக்கூற்றுகள்


கெளரவ விக்டர் அந்தனீ அவர்கள் "வைட் றோஸ் மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பாற்பண்ணை மற்றும் கால்நடை தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2012 நவம்பர் 17ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



[வரவு செலவுத் திட்டம் 2013]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks