E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஈ) ஆம் பந்தி, 16 ஆம் பிரிவு மற்றும் 112 ஆம் பிரிவின் கீழ் சனாதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012.02.21ஆம் திகதிய 1746/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(ii) 2010 ஆம் ஆண்டுக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
(iii) 2007, 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான றுஹுண பல்கலைக்கழகம்
(iv) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்
(v) 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi) 2011 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் முன்னேற்ற அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்புப் பிரேரணை

"விளையாட்டுக்கள்" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஒக்டோபர் 24ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks