E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 71 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 30 ஆம் பிரிவின் கீழ் கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012.09.06ஆம் திகதிய 1774/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(ii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகார சபை
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான தி அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv) 2011 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம்
(v) 2011 ஆம் ஆண்டுக்கான கண்டி மாவட்டச் செயலகம்
(vi) 2010 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
(vii) 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
(viii) 2011 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கைகள்

(ix) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஆண்டறிக்கையும் கணக்குக் கூற்றும்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்)

பிடியாணையின்றிக் கைதுசெய்யப்பட்ட ஆட்கள் தொடர்பில் புலனாய்வுகளை நடாத்துவதற்கும்; குறித்த சில வழக்குகளில் சுருக்க முறையற்ற விசாரணையை நடத்துவதனைத் தவிர்ப்பதற்கும் ஏற்பாடுசெய்வதற்கும், வழக்குத் தொடுநருக்கான சாட்சிக்காரர்களின் சத்தியத்தின் மீதான வாக்கு மூலத்தை எடுப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை நீதி அமைச்சர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"உலகளாவிய நீரகவளர்ப்பு நிதியத்தை ஸ்தாபித்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விக்டர் அந்தனீ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஒக்டோபர் 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks