பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா கெளரவ சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
சபாநாயகரின் தீர்ப்பு
திவிநெகும சட்டமூலம் பற்றிய உயர் நீதிமன்றின் தீர்மானம் தொடர்பாக கெளரவ சபாநாயகரின் தீர்ப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் – 2012
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான சட்ட வரைஞர் திணைக்களம்
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு
(v) 2011 ஆம் ஆண்டுக்கான அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு
(vii) 2011 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்டச் செயலகம்
(viii) 2011 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்டச் செயலகம்
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கைகள்
(ix) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம்
(x) 2009 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழு
(xi) 2010 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச் சபை
(xii) 2011 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சிச் சேவை
(xiii) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை
(xiv) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய கலாசார நிதியம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(xv) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை கமத்தொழில் ஆய்வுக் கொள்கைச் சபையின் நிருவாகம் சார்ந்த செயற்பாடுகளும் கணக்குகளும் அடங்கிய அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
ஒதுக்கீடு (2013)
2013 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடு களுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.
திவிநெகும
1995ஆம் ஆண்டின் 30ஆம் இலக்கச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை சமுர்த்தி அதிகாரசபையையும், 1996ஆம் ஆண்டின் 18ஆம் இலக்கச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகாரசபையையும், 2005ஆம் ஆண்டின் 26ஆம் இலக்கச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை உடறட அபிவிருத்தி அதிகாரசபையையும் ஒன்றிணைப்பதன் மூலம் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் எனவழைக்கப்பட வேண்டியதும் அறியப்பட வேண்டியதுமான திணைக்களமொன்றைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; திவிநெகும சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களை கிராமிய மட்டத்தில் தாபிப்பதற்கும், மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஒருங்கிணைக்கும் வலையமைப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதற்கும்; திவிநெகும சமுதாய அடிப்படையிலான வங்கிகளையும் திவிநெகும சமுதாய அடிப்படையிலான வங்கித் தொழிற் சங்கங்களையும் தாபிப்பதற்கும்; 1995ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க, இலங்கை சமுர்த்தி அதிகாரசபைச் சட்டத்தையும், 1996ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தையும், 2005ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க, இலங்கை உடறட அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தையும் நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"இலங்கை போக்குவரத்து சபைக்கு 3000 புது பஸ் வண்டிகள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வை.ஜி. பத்மசிறி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஒக்டோபர் 10ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks