E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2006,2007,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கான ரணவிரு சேவை அதிகாரசபை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபை
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழு
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான பனை அபிவிருத்தி சபை
(v) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹதபிம அதிகார சபை
(vi) 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான புடவைப் பங்கீட்டு சபை
(vii) 2010 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவுற்ற நிதியாண்டிற்கான பீசீசீ லங்கா லிமிடட்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(viii) 2011 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகம்
(ix) 2011 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டச் செயலகம்
ஆகியவற்றின் செயலாற்றறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கைகள்

(x) 2011 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2011 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xii) 2010 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற்றிறன் அறிக்கை
ஆகியவற்றின் செயலாற்றறிக்கைகள்

(xiii) 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குரிய ஆண்டு அறிக்கையும் கணக்குகளும்
(xiv) வரையறுக்கப்பட்ட மிகின் லங்கா (தனியார்) கம்பனியின் 2010 மார்ச் 31 ஆம் திகதிக்கு நிதிக் கூற்றுகள்


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்த ரத்னதிலக்க, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"தமிழ் நாட்டிலே இலங்கையர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தயாசிறி ஜயசேக்கர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1622 மணிக்கு பாராளுமன்றம் 2012 ஒக்டோபர் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks