E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆண்டுக்கான இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்புச் சபை
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுவரன்ஸ் கோபரேஷன் லிமிடெட்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கி
(v) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேயிலைச் சபை
(vi) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம்
(vii) 2009 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிலையம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(viii) 2011 ஆம் ஆண்டுக்கான மதுவரி ஆணையாளர் நாயகத்தின் நிருவாக அறிக்கை
(ix) 2011 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற எதிர்க்கட்சி முதல்வர் அலுவலகத்தின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை
(x) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) ஆம் பந்தியின் கீழ் உயர்கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.09.05ஆம் திகதிய 1774/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(xi) 2010 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(xii) 2011 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்ட செயலகத்தின் செயற்பாட்டு நிதி அறிக்கை

(xiii) 2011 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்டச் செயலகம்
(xiv) 2011 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்டச் செயலகம்
(xv) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கைகள்

கெளரவ எம்.எஸ். தெளபீக் அவர்களுக்கு "பரீரா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
• சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
• மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கு படலைகளை அமைத்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அருந்திக்க பர்னாந்து அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1802 மணியளவில் பாராளுமன்றம் 2012 செப்டெம்பர் 20ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks