E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள்-2012
(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) ஆம் பந்தியின் கீழ் உயர் கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.08.21ஆம் திகதிய 1772/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(iii) 2011 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட செயலகம்
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கைகள்

(v) 2011 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களம்
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் நிதி திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் விதிக்கப்பட்ட கட்டளைகள்

(vii) 2012.06.13ஆம் திகதிய 1762/29ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(viii) 2012.06.27ஆம் திகதிய 1764/5ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(ix) 2010ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சீட்டு நிறுவகம்
(x) 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகம்
(xi) 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்
(xii) 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ரணவிரு சேவா அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"வட மாகாண சபை தேர்தல்-2013" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1903 மணியளவில் பாராளுமன்றம் 2012 செப்டெம்பர் 19ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks