E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்று அறிக்கைகள்

(iii) 2010 ஆம் ஆண்டுக்கான நவீன தொழினுட்பவியல்களுக்கான ஆதர் சீ. கிளார்க் நிறுவகம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்
(v) 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு இயக்கச் சபை
(vi) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகம்
(vii) 2009 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(viii) 2011 ஆம் ஆண்டுக்கான காலி மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(ix) 2011 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(x) 2009 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் நிருவாக அறிக்கை


கெளரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க அவர்களுக்கு "இலங்கை படம் வரையும் தொழில்நுட்பவியலாளர் நிறுவக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"கைப்பற்றப்பட்டுள்ள நிதிகளின் பயன்பாடு" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஆகஸ்ட் 09ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks