E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1985ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1987ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, இறக்குமதிகள் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(3), 14 மற்றும் 20ஆம் பிரிவுகளின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012.06.27ஆம் திகதிய 1764/9ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(ii) 2011ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவு தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் – 2012

(iii) 2011ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
(iv) 2011ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களம்
(v) 2011ஆம் ஆண்டுக்கான பொதுத் திறைசேரியின் அரச கணக்குகள் திணைக்களம்
(vi) 2011ஆம் ஆண்டுக்கான அஞ்சல் சேவைகள் அமைச்சு
(vii) 2011ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சு

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்று அறிக்கைகள்

(viii) 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கான நீர் வளச் சபை
(ix) 2010ஆம் ஆண்டுக்கான அணு சக்தி அதிகாரசபை
(x) 2009ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(xi) 2011ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட செயலகம்
(xii) 2011ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்டச் செயலகம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்று அறிக்கைகள் மற்றும் கணக்குகள்

(xiii) 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கான மீளக்குடியமர்த்துதல் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகளும் நிதிக் கூற்றுகளும்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தரக்குறைவான எண்ணெய் இறக்குமதி” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1920 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஆகஸ்ட் 08ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks