E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க, சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் சுங்கத் தீர்வைகள் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்ட கட்டளை (2012.05.28ஆம் திகதிய 1760/2ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(ii) (451 ஆம் அத்தியாயமான) காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் (1) ஆம் உட் பிரிவின் கீழ் சுற்றாடல் அமைச்சரினால் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012.06.11ஆம் திகதிய 1762/1ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(iii) 2011 ஆம் ஆண்டுக்கான சுதேச வைத்திய அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை


2012 ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பாலித ரங்கே பண்டார அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பாடசாலை அதிபர் சேவையில் நிலவும் சம்பள முறைகேடு" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பதிரண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1817 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஆகஸ்ட் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks