பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) நிதி, திட்டமிடல் அமைச்சின் 2012 நடுவாண்டு அரசிறை நிலைமை அறிக்கை
(ii)
2011 ஆம் ஆண்டுக்கான பொதுத் திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகம்
(iv) 2009 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களம்
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்று அறிக்கைகள்
(v)
2009 மற்றும்
2010 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழு
(vi)
2010 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம்
(vii)
2010 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட (ஸ்ரீ லங்கா) விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(viii) 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகாமையின் (நாரா) வருடாந்த ஆண்டறிக்கைகளும் கணக்குகளும்
2012 மே மாதம் 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (திருமதி) அனோமா கமகே அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"யாழ்ப்பாணம், முல்லைதீவு, மன்னார் மற்றும் திருகோணமலையில் மீள்குடியேற்றம்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அ. விநாயகமூர்த்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1931 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூலை 18ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.