E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கி
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கி

(iii) 2011ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவு தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2012


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
• முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
• கலாநிதி மாலினி பொன்சேகா மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
• பிய தசுன மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"டெங்கு தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான தேசிய மட்ட வேலைத்திட்டம்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூலை 5ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks