E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3இ ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்ட கட்டளை (2012.02.27ஆம் திகதிய 1747/1ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(ii) 2011ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் (3)ஆம் உட்பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்ட கட்டளை (2012.05.09ஆம் திகதிய 1757/3ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

2006ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் விதிக்கப்பட்ட கட்டளைகள்;

(iii) 2012.04.04 ஆம் திகதிய 1752/17ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iv) 2012.05.09ஆம் திகதிய 1757/4ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(v) 2009ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றத்தின்
(vi) 2007ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்
(vii) 2010ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபையின்
ஆண்டறிக்கைகள்

(viii) 2011ஆம் ஆண்டுக்கான வெளிவிவகார அமைச்சு
(ix) 2011ஆம் ஆண்டுக்கான காணி, காணி அபிவிருத்தி அமைச்சு
வருடாந்த செயலாற்று அறிக்கை

(x) 2011ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் வருடாந்த முன்னேற்ற மற்றும் கணக்கு அறிக்கை

(xi) 2009ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த நிர்வாக அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

புத்த சிராவக பிக்குப் பல்கலைக்கழகம் (திருத்தம்)

1996 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, புத்த சிராவக பிக்குப் பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஐந்து ஒழுங்குவிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பாடசாலை மாணவர்களுக்கு அறநெறிப் பாடசாலையைக் கட்டாயப்படுத்துதல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூன் 20ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks