E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.

பின்வரும் பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன:-

தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகள் செயற்படுத்தல்

பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்படும் தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயனுள்ள பங்களிப்பொன்றாக அமைவதற்கு ஏதுவாக அவைகள் ஒரு வருடத்துக்குள் விவாதிக்கப்பட வேண்டுமென்றும் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

விளையாட்டின் மூலம் நோயற்ற சமூதாயமொன்றை உருவாக்குதல்

பிள்ளைப் பருவத்திலேயே பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடவைப்பதன் மூலம் நோயற்ற சமூதாயத்தை உருவாக்குவதற்கும், இயற்கையிலேயே திறமைகளைக் கொண்டுள்ள பிள்ளைகளை சர்வதேச மட்டத்திற்கு ஆற்றுப்படுத்துவதற்கும்/உலகப் புகழ்வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி நாட்டிற்கு நற்பெயரை பெற்றுக் கொள்ளும் வகையில் இன பேதமற்ற வகுப்புப் பேதமற்ற நியாயமான செயல் முறையொன்று அரச மட்டத்தில் வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

சுதேச ஆயுர்வேத மருத்துவர்களுக்கு சமாதான நீதவான் நியமனங்களை வழங்கல்

சுதேச ஆயுர்வேத மருத்துவர்கள் பணத்தையும் சிறப்புரிமைகளையும் எதிர்பார்க்காமல் அவர்களால் சமூகத்திற்கு ஆற்றப்படவேண்டிய சமூகப் பொறுப்பாகக் கருதி, குறிப்பாக கிராமிய மக்களுக்கு அளப்பெரும் சேவையை ஆற்றிவருவதனால், அச்சேவையை கெளரவிக்கும் வகையில் ஆயுர்வேத மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் சமாதான நீதவான் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென இப்பாராளுன்றம் கருதுகின்றது.

பின்வரும் பிரேரணை செல்லுபடியற்றதாக்கப்பட்டது:-

இலங்கையில் மிகப் பெறுமதியான இயற்கை வளங்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை பாதுகாப்பதற்காக முறையான விஞ்ஞான ரீதியிலான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்

இலங்கையில் மாத்திரமல்லாது உலகிலேயே மிக முக்கியமான இயற்கை வளமாகக் கருதப்படும் சிங்கராஜ காடு, கன்னெலிய பாதுகாப்பு வனம், ரூமஸ்சல கந்த, கொக்கல ஓயா தீவுக் கூட்டல்கள் மற்றும் கண்டல் மரங்கள், மாது கங்கை, ரம்சா ஈரழிப்பு நிலம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்கள் என்பவற்றை பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் முறையான விஞ்ஞான ரீதியிலான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 124 மற்றும் 125ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் (கூட்டிணைத்தல்) சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• பலன புத்தர் சிலை அமைப்புச் சபை
• த. மு. தசநாயக்க சமூக சேவைகளும் அறக்கட்டளை தர்ம ஸ்தாபனமும்


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 126ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) "த இன்ஸ்ரிரியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் எக்கவுன்டன்ஸ் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு சபையில் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழு "பி" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"நுவரெலிய பாடசாலை மாணவர்களுக்கான ஒரு கிண்ணப் பால்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1833 மணியளவில் பாராளுமன்றமானது 2012 ஜூன் 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks