பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2000, 2001, 2002, 2003, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான ரணவிரு சேவை அதிகார சபையின்
(ii)
2010 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின்
ஆண்டறிக்கைகள்
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்;
(iii) 2011.06.20ஆந் திகதிய 1711/4ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iv) 2011.11.01ஆந் திகதிய 1730/9ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(v) 2011.11.02ஆந் திகதிய 1730/14ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vi) 2011.11.23ஆந் திகதிய 1733/23ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(vii) 2011.11.23ஆந் திகதிய 1733/24ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(viii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களத்தின்
(ix) 2011 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின்
(x) 2011 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் அமைச்சின்
செயலாற்றுகை அறிக்கைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ இரத்ன தேசப்பிரிய சேனாநாயக்க
(ii) மறைந்த கௌரவ டபிள்யு. ஐ. பர்னாந்து
அதனையடுத்து, 1637 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூன் 07ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.