E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமில் அமைச்சின் முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2011ஆம் ஆண்டுக்கான பொதுத் திறைசேரியின் அரச நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2011ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவு தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2012
(iv) 2010ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரங்கள் கம்பனியின் ஆண்டறிக்கை
(v) 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை


கெளரவ எரிக் பிரசன்ன வீரவர்தன அவர்களுக்கு "கல்பவுருக் ஷ சங்வர்தன பதனம (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
• உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
• மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"முன்பள்ளி பாடசாலைகளுக்கான தேசிய பாடத்திட்டம்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூன் 06ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks