E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான வரையறுத்த இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(iii) முறையே 2010 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மற்றும் 2011 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 (1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவு தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2011 மற்றும் 2012
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(v) 2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் 17 ஆம் 18 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 34 ஆம் பிரிவின் கீழ் சமூக சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012.03.16 ஆந் திகதிய 1750 ஆம் இலக்க வர்த்தமானி)
(vi) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை—ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகத்தின் ஆண்டு அறிக்கை
(vii) 2010 ஆம் ஆண்டுக்கான நிர்மாணம் பயிற்சியளிப்பு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (இக்டாட்) வருடாந்த அறிக்கை
(viii) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.02.28 ஆம் திகதிய 1747/4 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானி)
(ix) இலங்கையின் தேசிய விளையாட்டுத்துறைக் கொள்கை


கெளரவ புத்திக பதிரண அவர்களுக்கு "தென்னிலங்கை மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீட (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ (டாக்டர்) ரோஹன புஷ்பகுமார அவர்களுக்கு "நிமல் சிறிபால த சில்வா மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ஜானக பண்டார அவர்களுக்கு "மவுன்ட் கார்மல் கல்வி நிறுவக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ராஜீவ விஜேசிங்க அவர்களுக்கு "வசந்த சேணாநாயக்க மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ரீ.பீ. ஏக்கநாயக்க மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்

பரிசீலிக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது.

பிய தசுன மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

சபையில் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழு "பி" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவின் அறிக்கை" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (அல் ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1915 மணியளவில் பாராளுமன்றம் 2012 மே 09ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks