E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2009 ஆம் ஆண்டுக்கான தி அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை


குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை பற்றிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை -

• 2008 ஆம் ஆண்டிற்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2011.04.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)

• 2009 ஆம் ஆண்டிற்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2011.06.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


2012 மார்ச் மாதம் 09ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு விவாதம்

"பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் 2012.03.23ஆம் திகதியன்று விடுக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட அறிக்கை" பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2012 மே 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks