E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2009 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபத்தின் ஆண்டறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்வரும் பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன:-

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பூர்வாங்க வரவு செலவுத்திட்ட விவாதமொன்று நடாத்துதல்

இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் போன்று, வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலுள்ள எதிரானதும் சார்பற்றதுமான தாக்கல்கள் ஏதும் இருப்பின் அவைகளை நிவர்த்தி செய்வதற்கும் தணிப்பதற்கும் பூர்வாங்க வரவு செலவுத்திட்ட விவாதமொன்று நடாத்தப்பட வேண்டு மென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

மருத்துவத் துறையின் தொழில் சார் பெறுமதியினைப் பேணல்

உள்நாட்டு, சர்வதேச மருத்துவ முறையினுள் தொழிற்தகைமை மற்றும் அனுபவத்தினைக் கொண்டிராத மருத்துவர்கள் சிகிச்கையளிப்பதில் ஈடுபட்டுள்ளமையினால், சாதாரண நோயாளர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி நேர்ந்துள்ளதால் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளதாதலாலும், இதன் மூலம் மருத்துவத் துறையில் பணியாற்றும் தகைமை பெற்ற தொழில்சார் மருத்துவர்கள் சமூகத்தில் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளதாதலாலும், மருத்துவத் துறையின் தொழில்சார் பெறுமதியினை பேணுமுகமாக, ஒழுங்காகவும் முறைசார் ரீதியிலும் சட்ட ரீதியிலும் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

காதி நீதிமன்ற முறைமைக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுக்கொடுத்தல்

1929 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவாகரத்து கட்டளைச்சட்டத்தின் கீழ் காதி நீதிமன்ற முறைமை இலங்கையில் தாபிக்கப்பட்டு, அதன் பின்னர் 1951 இல் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட அக்கட்டளைச் சட்டம், முஸ்லிம் குடும்பங்களில் எழுகின்ற பிணக்குகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பதற்கு உரித்தளிக்கப்பட்ட, காதி நீதிபதிகளின் தத்துவங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, முறைமையின் கெளரவத்திற்கு பொருத்தமான இடங்களில் அமர்வுகள் அத்தகைய முறையில் நடத்தப்படுவதற்கு ஏற்றவாறு காதி நீதிமன்ற முறைமையின் அந்தஸ்து தரமுயர்த்தப்பட வேண்டும் என்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் காதி நீதிபதிகள் நியமிக்கப்படுவதனால் ஏனைய நீதிமன்ற அதிகாரிகளுக்கு கொடுக்கப்படக்கூடிய மதிப்புமிக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க சம்பள அமைப்பு ஒன்றில் அவர்கள் வைக்கப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

பின்வரும் பிரேரணை செல்லுபடியற்றதாக்கப்பட்டது:-

உஸ்ஸன்கொட மலைத்தொடர் அமைந்துள்ள நிலப் பரப்பைப் பேணிப் பாதுகாத்தல்

வரலாற்றுக்கு முந்திய யுகத்தில் மத்திய முன்னைய காலத்திற்குரியதென இனங்காணப்பட்டுள்ளதும் தென் மாகாணத்தில் அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளதும் தென்னிலங்கையின் ஹோர்டன் சமவெளி எனப் பிரபல்யமடைந்துள்ளதுமான உஸ்ஸன்கொட மலைத்தொடர் அமைந்துள்ள நிலப்பரப்பு, இலங்கையில் இருபத்தெட்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த திறந்த வெளிக் குடியேற்றமொன்றின் கேத்திரவடிவ ஆயுதங்களும் பாறைகளும் கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதியாகவும் கடல் மற்றும் தரை உயிரியல் பல்வகைத் தன்மையில் பெருமளவு வளங்கள் நிறைந்த நிலப்பகுதியாகவும், சிறந்த கடலாமைகளின் வாழ்விடமாகவும், சுனாமிப் பேரலையினால் மக்களைப் பாதுகாத்த மதிலாகவும் அதிக பெறுமதியை கொண்டிருப்பதனால் இந்நிலப்பகுதியில் ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்களை நிறுத்தி விட்டு உடனடியாகப் பேணிப் பாதுகாக்க வேண்டிய சுற்றாடல் தொகுதியொன்றாக பிரகடனப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.


பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 120 முதல் 124 வரையான விடயங்களாகக் காணப்படும்) சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு சபையில் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

• தற்காப்புக் கலைகளுக்கான நிறுவகம் (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு
• விலங்கின நலம்பேணல் - "பி" நிலையியற்குழு
• கலாநிதி மாலினி பொன்சேகா மன்றம் (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு
• மொனறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு
• த.மு.தசநாயக்க சமூக சேவைகளும் அறக்கட்டளை தர்மஸ்தாபனமும் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2012 மார்ச் 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks