பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் (SLECIC) வருடாந்த அறிக்கை
(ii) 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் ஆண்டறிக்கைகள்
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான சட்டவரைஞர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த செயலடைவு அறிக்கை
(v)
2010 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
கெளரவ நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
• சமஸ்த லங்கா சாசனாரக்சக மண்டலய (கூட்டிணைத்தல்)
• த பேரண்ட்ஸ் மன்ற (கூட்டிணைத்தல்)
கெளரவ ராஜீவ விஜேசிங்க அவர்களுக்கு
"பாராளுமன்றத்தின் இளைப்பாறிய பணியாளர் சங்க (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"இபொச மற்றும் புகையிரதத்தில் புத்த பிக்குகளுக்கான இலவசப் பயணம்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1832 மணியளவில் பாராளுமன்றம் 2012 மார்ச் 08ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.