பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 70 ஆ ஆம் பிரிவின் கீழ் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.02.22ஆந் திகதிய 1746/11ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(ii) 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க 40 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் 51 ஆம் பிரிவின் கீழ் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2011.06.07ஆந் திகதிய 1709/15ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iii) 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டு அறிக்கைகள்
(iv)
2009 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை
(v) 2008-2009 மற்றும் 2009-2010ஆம் ஆண்டுகளுக்கான நோத்சீ லிமிடெட்டின் வருடாந்த கணக்கீடும் கணக்காய்வு அறிக்கைகளும்
(vi) 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ஆட்களையும், ஆதனங்களையும், கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகார சபையின் வருடாந்த அறிக்கைகளும் நிதிக்கூற்றுக்களும்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ ரூபசேன கருனாதிலக
(ii) மறைந்த கௌரவ எஸ். சிவதாசன்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கெதிரான சதிகள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1924 மணியளவில் பாராளுமன்றம் 2012 மார்ச் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.