E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1998ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க, இலங்கை தேசிய நீரியல் பொருட்களைப் பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 37ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீர்வாழுயிரின வளங்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2009.05.15ஆந் திகதிய 1601/35ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(ii) 1998ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க, இலங்கை தேசிய நீரியல் பொருட்களைப் பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 37ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2010.10.25ஆந் திகதிய 1677/7ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


சேவை நலன் பாராட்டுப் பிரேரணை

முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க கித்துள்கொட அவர்களின் சேவையைப் பாராட்டும் பிரேரணை ஒன்றை கெளரவ பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற் கோலாசானும் கெளரவ பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவரும் பிரேரித்திருந்தனர்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"எரிபொருள் கட்டணத்திற்கேற்ப மின்சாரக் கட்டணத்தைச் சீராக்கல்" மீதான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றம் 2012 பெப்ரவரி 23ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks