E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்புகள் இயக்குநர் அறவீட்டு வரி தொடர்பில், நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2011.12. 29ஆந் திகதிய 1738/15ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(ii) 2010ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 (1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவு தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் – 2011
(iii) 2009ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(iv) 2009ஆம் ஆண்டுக்கான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v) 2009/2010ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை
(vi) 2009ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆண்டறிக்கை


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ செல்டன் ரனராஜ
(ii) மறைந்த கௌரவ எச்.எம்.டீ.பி. ஹேரத்



கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் பிரேரிக்கப்பட்ட "வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துகளைப் பற்றி ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிகுழு" பற்றிய பிரேரணை சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1558 மணிக்கு பாராளுமன்றம் 2012 பெப்ரவரி 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks