E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 1979ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழான கட்டளை (2011.11.21ஆந் திகதிய 1733/5ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி) (ii) 1979ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழான கட்டளை (2011.11.21ஆந் திகதிய 1733/6ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி) கெளரவ எம்.பீ.பாறூக் அவர்களுக்கு "ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) – குழுநிலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட இருபத்திநான்காம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்" இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2012, 98 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் விபரங்களுக்கு ''வரவு செலவுத் திட்டம் 2012' பிரிவுக்கு விஜயம் செய்க. (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 14 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:- (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் (ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (iii) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iv) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (v) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள் (vi) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் (vii) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 15 முதல் 19 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு சபையினால் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:- (i) ரி.பீ. ஏக்கநாயக்க மன்றம் (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு (ii) குமாரசிறி ஹெட்டிகே மன்றம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு (iii) இலங்கைப் புவிச்சரிதவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு (iv) ஹந்தகல வலகம்பா புராண கல்லென் ரஜமகா விஹாரஸ்த அபிவிருத்தி சபை (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு (v) ஸ்ரீ பியரத்தன சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அடிப்படை மன்றம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு அதனையடுத்து, 1750 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜனவரி 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks