E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (235 ஆம் அத்தியாயமான) சுங்க் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதிகள் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம் (2011.11.21ஆந் திகதிய 1733/9ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(ii) 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள் (2011.11.21ஆந் திகதிய 1733/10ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளை (2011.11.21ஆந் திகதிய 1733/11ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பிரேரிக்கப்பட்ட ஆரம்பநிலைப் பாடசாலைகளுக்கு முன் பள்ளி பாடசாலைகளை தாபித்தல்- பிரேரிக்கப்பட்ட இரண்டாம்நிலைப் பாடசாலைகளுக்கு ஆரம்பநிலைப் பாடசாலைகளை தாபித்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வை.ஜி. பத்மசிரி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2011 டிசம்பர் 15ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2012]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks