E   |   සි   |  

2026 நவம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) எதிரான உலகளாவிய 16 நாட்கள் செயற்பாட்டு வேலைத்திட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ (1) எனும் உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்புப் பேரவையின் எட்டாவது அறிக்கை 


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன - இரண்டு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி - இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார  - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச
ஹோமாகம தாவர வைரஸ் அடையாள நிலையம் மற்றும் கன்னொறுவை தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையம் எதிர்நோக்கும் சவால்கள்

மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கூற்றொன்றினை பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள்) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மூலிகைச் செய்கையை ஊக்குவித்தலும் சித்த மருத்துவத்தை வலுப்படுத்தலும்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1913 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 26ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks