E   |   සි   |  

2026 நவம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) எதிரான உலகளாவிய 16 நாட்கள் செயற்பாட்டு வேலைத்திட்டத்தை” முன்னிட்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான அடையாளச்சின்னம்
2 : 2026 நவம்பர் 12 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2027 வரவு செலவுத் திட்ட உரை மற்றும் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அச்சிடப்பட்ட பிரதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான வ/ப லங்கா கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி - ஆறு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ரவி கருணாநாயக்க
பணவியல் கொள்கை இறுக்கமாக்கலினால் பணவீக்கம் மற்றும் கடன் வழங்கலில் ஏற்படும் தாக்கம்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

இலங்கையின் வருடாந்த மீன் உற்பத்தி தொடர்பாக 2026.11.05 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள்) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

(ii)    வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1833 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 25ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks