பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2025 ஆம் ஆண்டுக்கான இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் (இலங்கை) வருடாந்த அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான மத்திய கலாசார நிதியத்தின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஹங்சக விஜேமுணி - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே - நான்கு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) தீப்தி வாசலகே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
மண் கனியங்களின் அகழ்வு மற்றும் சுரங்க உரிமங்களை வழங்குவதற்கான சட்ட நிலை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கை பொறியியல் சேவையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக 2026.11.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஏழாவது நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூல (2027) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 157 பேரும் எதிராக 60 பேரும் வாக்களித்தனர்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1859 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 21ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks