E   |   සි   |  

2026 நவம்பர் 16ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII (23) மற்றும் XXIV (24) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XV (15) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XVIII (18) மற்றும் XIX (19) ஆம் பகுதிகளை 


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட தொலைதூர கற்கை நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் பத்தாவது அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் பதினெட்டாவது அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே      - இரண்டு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்ஹ  - இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அநுராத ஜயரத்ன  - இரண்டு மனுக்கள் 
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கையில் இணையப் பாதுகாப்புத் தயார்நிலை மற்றும் அரச நிதி, வங்கி முறைமைகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பு 

மேற்சொன்ன வினாவிற்கு டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2027) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாள்) 
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் காணிகளை விடுவித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1842 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks