E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ ஈ.பி. போல் பெரேரா
(ii) மறைந்த கௌரவ பி.ஓ. விமலநாக
(iii) மறைந்த கௌரவ என்.எம். புஹார்டின்
(iv) மறைந்த கெளரவ சரத் சந்திர ராஜகருணா
- தொடரப்படவுள்ளது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை பிரயோக புள்ளிவிபரவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 8 ஆம் இலக்கம் வரையான விடயங்களாகக் காணப்படும்) சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

• தெஹிவளை நெதிமாலை பௌத்த கலாசார நிலையம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்) - "பி" நிலையியற்குழு
• ஐக்கிய இலங்கை பிக்குமார்களுக்கான அபிவிருத்தி அமைப்பு (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு
• தேசமான்ய ரவீந்திர வணிகசேகர ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு
• இலங்கை ஒளடதங்கள் சங்கம் (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு
• ஜோன் செனவிரத்ன மன்றம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு
• அங்கவீனர்களுக்கான ஆலோசனையும் உதவிகளையும் வழங்குவதற்கான திதொரா தியேட்டர் நிறுவகம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு
• ஸ்ரீ தம்மாலங்கார சமூக சேவைகள் மன்றம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"கல்வித்துறை நிருவாகத்தின் வீழ்ச்சி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ புத்திக பதிரண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஆகஸ்ட் 12 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks