பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை நிலை வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்பிறல் 10 ஆம் திகதிய 2483/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்பிறல் 10 ஆம் திகதிய 2483/18 இலிருந்து 2483/85 வரையிலான இலக்கங்களைக் கொண்ட 68 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(iv) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைநிலை வணிகம் தொடர்பில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மே 11 ஆம் திகதிய 2488/03 மற்றும் 2488/04 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi) 2025 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி அனுஸ்கா திலகரத்ன
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ கே.காதர் மஸ்தான்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களிலுள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறை
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிதி மற்றும் ஏனைய பிரச்சினைகள்
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டி.வீ. சானக அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 செப்தெம்பர் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.:-
(i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம் - திருத்தங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 158; எதிராக 63)
(ii) நீதித்துறை (திருத்தம்) - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 158; எதிராக 62) பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது
அதனையடுத்து, 2015 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks