பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) " எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
3 : “நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) (L.D.O. 08/2026)” “நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) (L.D.O. 11/2026)” எனும் சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
4 : பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ் அப்துல் வாசித் அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது
5 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலி
6 : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் இலத்திரனியல் வடிவில் பெறுவது குறித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் விருப்பத்தையும் கண்டறிதல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
A.
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் III (3) ஆம் பகுதி
(ii) விவசாயத் திணைக்களத்தால் பராமரித்துச் செல்லப்பட்ட தற்போது மூடிவிடுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள ─
• 7000/0/0/0285/0010 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட உருளைக்கிழங்கு செய்கை விரிவாக்கத் திட்ட முற்பணக் கணக்கு;
• 7000/0/0/0999/0409 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட வெலிசர விவசாய வேலைத்தள தொழிற்பாட்டிற்கான முற்பணக் கணக்கு;
• 7000/0/0/0999/0002 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட விவசாய பழுதுபார்ப்பு வேலைத்தளம் தொடர்பான முற்பணக் கணக்கு; மற்றும்
• 7000/0/0/0285/0004 எனும் கணக்கு இலக்கத்தினைக் கொண்ட நாரஹேன்பிட்டி விவசாய தொழில்நுட்ப மத்திய பொருட் களஞ்சியம் தொடர்பான முற்பணக் கணக்கு
போன்ற நான்கு முற்பணக் கணக்குகளுக்கான ரூ. 65,654,746.90 (அறுபத்தைந்து மில்லியன் அறுநூற்று ஐம்பத்து நான்காயிரத்து எழுநூற்று நாற்பத்தாறு ரூபா தொன்னூறு சதம்) தொழிற்பாட்டு நட்டங்கள் தொடர்பாக கணக்காய்வாளரின் அவதானிப்புகளை உள்ளடக்கிய அறிக்கையை, இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் நான் சமர்ப்பிக்கின்றேன்.
B.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) ஆம் பகுதியையும்;
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIX (59) ஆம் பகுதியையும்;
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXIV (64) மற்றும் LXV (65) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) பகுதியையும்; மற்றும்
• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் III (3) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் I (1) பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்கரை பாதுகாப்பு துறையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2026 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் புகையிரதத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) 2019 ஆம் ஆண்டுக்கான எல்கடுவ பிளான்டேசன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(x) 2024 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(xi) 2025 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xiv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த விஜேபால
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஆரியவங்ஷ
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முறையான வழிமுறை
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கையை இந்து சமுத்திரத்தின் முதன்மையான கடல்சார் மறுஏற்றுமதி மற்றும் தளவாட மையமாக இலங்கை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பாக அரசாங்கத்தின் தலையீடு மற்றும் எடுக்கப்பட்டுள்ள இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றிய கூற்றொன்றினை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் முன்வைத்தார்.
(ii) ஓய்வுபெற்ற முப்படைகளின் வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் குறைகளுக்கான நிவாரணம் தொடர்பான சுற்றறிக்கை பற்றிய கூற்றொன்றினை பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 3 இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன் (ii) ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-
(i) பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks